ShareChat
click to see wallet page
search
#ஜனவரி_12 சுவாமி #விவேகானந்தர் #பிறந்த_நாள் இளைஞர்களுக்கு அவர்களின் பலத்தை சுட்டிக் காட்டியவர் சுவாமி விவேகானந்தர். விவேகானந்தர் புதிய இந்தியாவிற்கும், பழைய இந்தியாவிற்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார். பண்டைய மெய்ஞ்ஞானத்திற்கும், இன்றைய விஞ்ஞானத்திற்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார். அத்துடன் மேற்கத்திய சிந்தனைகளுக்கும், கிழக்கு நாடுகளின் சிந்தனைகளுக்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார். சுவாமி விவேகானந்தர் அரசியலில் ஈடுபட்டது கிடையாது. எனினும் அவரது தேசபக்தி கருத்துகள்தான் முதன் முதலில், இந்தியாவில் தேசிய எழுச்சியை ஏற்படுத்தியது. அந்நாளில், 'தேசபக்த ஞானி' என போற்றப்பட்டார்.விவேகானந்தர் இந்தியாவில் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் தேசபக்தி கருத்துகள் நிறைந்திருக்கின்றன. இச் சொற்பொழிவுகள் அடங்கிய விவேகானந்தரின் நூல் இந்திய விடுதலைப்போர் நடந்த போது 'இந்திய தேசியத்திற்குப் பைபிள்' என்று அழைக்கப்பட்டது.விவேகானந்தரால் முதலில் வங்கத்தில் தேசிய எழுச்சி தோன்றியது. பிறகு அது இந்தியா முழுவதும் பரவியது. பின்னர் அது மகாத்மா காந்தியடிகள் தலைமையில் நல்ல வடிவம் பெற்றது. விவேகானந்தரின் தேசபக்தி கருத்துகள், இந்தியாவில் விடுதலைப் போராட்டம் தோன்ற அடித்தளம் அமைத்தன. #life #lifes
life - NATIONAL YOUTH DAY NATIONAL YOUTH DAY - ShareChat