ShareChat
click to see wallet page
search
நாம் தமிழர் கட்சி மாநில பொதுக்குழு சிறப்பு தீர்மானங்கள் 2025 2. அண்மைக்காலமாக வேலைவாய்ப்புத் தேடி தமிழ்நாட்டிற்கு வரும் வட மாநிலத்தவரின் எண்ணிக்கை பல இலட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் அதிகரிக்கத் தொடங்கிய வடமாநிலத்தவர் ஆதிக்கம் தற்போது தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களிலும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இதனால், மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதோடு, பொருளாதாரமும் பெருமளவு பறிபோகிறது. மேலும், அவ்வாறு வேலைக்கு வரும் வடமாநிலத்தவர்கள் அடுத்த சில மாதங்களிலேயே குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, இருப்பிடச்சான்று உள்ளிட்டவை பெற்று நிரந்தரமாக தமிழ்நாட்டில் குடியேறும் நிகழ்வும் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழர்கள் தங்கள் அதிகாரத்தை இழந்து ஏதிலிகளாக மாறும் நிலமாக தமிழ்நாடு மெல்ல மெல்ல மாறிவருகிறது. அதுமட்டுமின்றி, கொலை, கொள்ளை, போதைப்பொருள், கடத்தல், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடுங்குற்றச் செயல்களில் வடமாநிலத்தவர்கள் ஈடுபடுவதும், கும்பல் மனப்பான்மையில் பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்தும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. ஆகவே, தமிழ்நாட்டிற்குள் பணிக்கு வரும் வடமாநிலத்தவரின் எண்ணிக்கை, பணி புரியும் நிறுவனம், காலம், தங்கும் இடம், அவர்களின் சொந்த முகவரி ஆகியவற்றைப் பதிவு செய்யும் வகையில் #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #சீமான் #📺அரசியல் 360🔴 #ராசிபுரம் நியூஸ் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் உடனடியாக உள்நுழைவு அனுமதிச் சீட்டு (ILP - Inner Line Permit) முறையை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த, தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இப்பொதுக்குழுவின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - ShareChat