ShareChat
click to see wallet page
search
ஆருத்ரா தரிசனம் =8 ================== .நடராஜமூர்த்தியே பஞ்சாக்ஷரம் ===================================== தத்வார்த்த ஸுரூபம் --------------------------------------------------- யஜுர்வேத பஞ்ச ப்ரஹ்மோபனிஷத் ========================= "பஞ்சாக்ஷரமயம் சம்பும் பரப்ரஹ்ம ஸ்வரூபினம் நகாராதி யகாராந்தம் ஜ்ஞாத்வா பஞ்சாக்ஷரம் ஜபேத்" பொருள் ========= பரப்ரஹ்ம ஸுரூபமான பஞ்சாக்ஷரத்தை தன்மயமாகக் கொண்டவர் சம்பு. பஞ்சாக்ஷரம் நகாரம் முதல் யகாரம் இறுதியாக உள்ளதென அறிந்து ஜபிக்ககடவர் நமசிவாய – நமச்சிவாய – என்ற சொல்லின் பொருள் விளக்கம் உலக இயக்கத்திற்கு மூலமாக உள்ள ஐந்தொழிலை பரமன் ஐந்தெழுத்தாலே நடத்துகின்றான். அந்த ஐந்தெழுத்தும் அவன் திருமேனியாக விளங்குகிறது. இதையொட்டியே நமச்சிவாய வாழ்க என்று தொடங்கி சிவபுராணப் பாடலில் மணிவாசகர் இறைவனை வாழ்த்துகின்றார். ந – ஆக்கல் – வலது மேல் கை ம – காத்தல் – வலது கீழ்க் கை சி – அழித்தல் – மேல் இடக்கை வா – மறைத்தல் – கீழ் இடக்கை ய - அருளுதல் – தூக்கிய இடக்கால் ச் – ஒடுக்குதல் – ஊன்றிய வலதுகால் இப்படி ஐந்தொழில் வல்லான் சிலை, ஆறு தொழில்களை விளக்கக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது. ஐந்தெழுத்து மந்திர வடிவமான ஆருத்ரா தரிசன நாளில் தரிசித்து நற்கதியடைவோம் 🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #மார்கழி ஆருத்ரா தரிசனம் #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏ஆன்மீகம்
🙏🏼ஓம் நமசிவாய - மார்கழி திருவாதிரையில் ஆடல்வல்லானின் அற்புதம் நிதழவுர் ஆருத்ரா தரிசனம் மார்கழி திருவாதிரையில் ஆடல்வல்லானின் அற்புதம் நிதழவுர் ஆருத்ரா தரிசனம் - ShareChat