சிவமணியம்
மிகப்பிரபலமான ஒரு மகாத்மா, திரு வெங்கட
கிருஷ்ணய்யாங்கற வக்கில் அடியார் சென்று தரிசிச்சப்ப, அவரை ஓம் நமஹன்னுதான்
ஜபம் பண்ணணும்னு சொன்னார்.
சுத்த பிரணவம், கிருஹஸ்தர்கள் ஜபம் பண்ணக் கூடாதுன்னும், அதை சன்யாசிகள்தான் உச்சரிக்கணும்னும், மத்தவங்க ஓம் நமஹன்னுதான் சொல்லணும்ன்னு சொன்னதை பகவான் கிட்டே சொன்னார்.
பகவான்: ஏன் சன்யாசிகளுக்குதான் ஆத்மா இருக்காமா! மத்தவாளுக்கு இல்லையாமா? அவா மட்டும்தான் ஆத்மாவை உணரணுமாமா...! மத்தவா வணங்கணுமாமா...!
லேடி பேட்மேனிடம் பகவான் சொன்னது.
பகவான்: அசையாத மாறாத நிலை ஒண்ணு இருக்கு. கனவு, நனவு, தூக்கம் இது மூணும் அதுமேலே ஏற்படற மாற்றம். அசைவு. சினிமா ஸ்கிரீன்லே படம் ஓடற மாதிரி.
எல்லோரும் படத்தையேதான் பாக்கறோம். ஸ்கிரீனை விட்டுடறோம். ஞானிக்கு ஸ்கிரீன்தான் கவனம். படம்மில்லை. படம் ஸ்கிரீன்ல ஓடினாலும் ஸ்கிரீனை பாதிக்காது. ஸ்கிரீன் ஓடாது.
டிரெயின்லே போகும்போது, அவனே போறதா நினைச்சுக்கறான். ஆனா அவன் நல்லா இருக்கைலே (seat) உக்காந்துதான் இருக்கான். ரயில்தான் நகர்றது. ஆனா அதோட நகர்வை அவன் மேல ஏத்திக்கறான். ஏன்னா அவன் உடம்புன்னு நினைக்கறான். இந்த ஸ்டேசன் தாண்டிட்டேன்... அந்த ஸ்டேசன் தாண்டிட்டேன்... கிட்டே வந்துட்டேன்....கறான். கொஞ்சும் யோசிச்சுப் பாத்தாலே, அவன் அங்கேயேதான் இருக்கைலே உக்காந்திருக்கான்கறது தெரியும். ஸ்டேசன்தான் அவனைக் கடந்து போறதுன்னு புரியும். ஆனாலும் அவனே எல்லாத் தூரத்தையும் நடந்தே வந்த மாதிரி சொல்றான்.
ஞானி... உண்மையான நிலை இருக்கறது மாத்ரந்தான், அது மாறாம அப்படியே இருக்கு, அதிலே எல்லா வேலையும் அவனைச் சுத்தி தானா நடக்கறதுன்னு நல்லாத் தெரிஞ்சு இருக்கான்.
அவன் ஸ்வபாவம் மாறாது.
அவன் நிலை எதனாலும்
பாதிக்கப்படாது. எல்லாத்தையும் உதாசீன பாவத்தோடே பாத்துட்டு அவன் சுகமாயிருப்பான்.
அவனுடைய நிலையே உண்மை நிலை. உண்மையான நிலை எப்பவும் ஆதியிலே இருக்கற ஸ்வபாவ ஸ்திதி. ஒருத்தன் அந்த நிலையை அடைஞ்சு அதிலேயே நிலைபெற்றுட்டா... அப்புறம் எப்பவும் மாறாது. அதனாலே பாதாள லிங்கத்திலே செல்லரிச்சு இருந்தப்போ இருந்த நிலை, குறுக்கீடு இல்லாமே, மாறாம தொடர்ந்து இருந்துகொண்டு இருக்கு. என்ன... அப்போ உடம்பு அசையாம கிடந்தது! இப்போ அசையறது ! அவ்வளவுதான்.
உலகத்திலே நடந்துக்கற விதத்திலே, ஞானிக்கும், அஞ்ஞானிக்கும் ஒண்ணும் வித்தியாசம் இல்லே. உலகத்தைப் பாக்கற பார்வையிலேதான் வித்தியாசம். அஞ்ஞானி தன்னை ஒரு போலி நானோட சம்பந்தப்படுத்திக்கொண்டு ஆத்மாவோட காரியங்களை அவனே செஞ்சதா நினைப்பான். ஞானிக்கு அகந்தையில்லாததாலே எதனோடயும் சம்பந்தப் படுத்திக்க முடியாது. அவனோட நிலையை இந்த உதாரணங்கள் கொஞ்சம் விளக்கும்.
● தூங்கும் குழந்தை சாப்பிட்டது
●வண்டி துயில்வான் கதை.
● மனசை எங்கேயோ வச்சு கதை கேட்டவன் கதை
●இரண்டு நண்பர்கள்லே ஒருத்தன் கனவு கண்டது
கேள்வி: தூக்கத்துலே ஒண்ணும் இல்லை. மந்தமா இருக்கு. ஆனா விழிப்புல அழகான விஷயங்களும் ஆர்வமான சங்கதிகளும் இருக்கு.
பகவான்: நீங்க எதை அழகாவும், ஆர்வமாவும் இருக்குன்னு சொல்றேளோ, அது ஞானிக்கு மந்தமான தூக்க நிலை.
கேள்வி: விழிப்பு நிலையை விட தூக்கத்துல சுத்த அறிவுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கோமா?
பகவான்: தூக்கம், கனவு, நனவு இந்த மூனும் வெறும் தோற்றம். எப்பவும் சாமான்யமா இருக்கற அறிவிலே ஏற்படறது. யாரும் ஆத்மாவை விட்டு இருக்க முடியுமா?
அதனாலே இந்தக் கேள்வி அப்போதான் செல்லுபடி ஆகும்.
கேள்வி: இல்லை, தூங்கும்போது சுத்த அறிவுக்கு நெருக்கமா இருக்கறதாகவும், விழிப்புல விலகிடறோம்னும் சொன்னாங்க. அதனால கேட்டேன்.
பகவான்: இந்த கேள்வியை வேற மாதிரி கேக்கலாம். விழிப்பு நிலையைவிட தூக்கத்திலேதான் நான்... எனக்கு ரொம்ப
நெருக்கமா இருக்கேனா?
ஆத்மா... சுத்த அறிவு. யாரும் ஆத்மாவுக்கு வெளியே இருக்க முடியாது. இரண்டு இருந்தாத்தான் முடியும். சுத்த அறிவிலே துவிதம் இல்லை. ஒரே ஆள்தான் தூங்கறான், கனவு காண்றான், முழிச்சுக்கறான்.
கேள்வி: விழிப்பு அழகாவும், ஆர்வமாவும் இருக்கு. அப்படி
தூங்கும்போது இல்லை.
பகவான்: பேசறதுக்கு முன்னாடி இதை முதல்லே தெளிவு படுத்திப்போம். தூங்கும்போது நீங்க இருக்கேளா?
கேள்வி: ஆமா... இருக்கேன்.
பகவான்: அதே ஆள்தானே இப்போ முழிச்சுருக்கறதும்.
கேள்வி: ஆமா...
பகவான்: அப்பொ ஒரு தொடர்ச்சி இருக்கில்லையா... தூக்கத்துக்கும் விழிப்புக்கும்.
அது என்ன தொடர்ச்சி? அதுதான் சுத்த அறிவு.
இரண்டு நிலைக்கும் வித்தியாசம் உண்டு. என்ன வித்தியாசம்? சம்பவங்கள், அதாவது உடம்பு, உலகம், விஷயங்கள் விழிப்புலே தோற்றமாறது. தூக்கத்துலே மறைஞ்சிடறது.
பக்கம்:574 - 577.
அப்பனேஅருணாசலம். 🚩🕉🪷🙏🏻 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #மண்ணில் வாழ்ந்த மகான்கள் #சித்தர்கள் வாக்கு


