ShareChat
click to see wallet page
search
❤️1967-ல் பகவானுடைய ஸமாதிக் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, இரண்டாவது முறையாக ஜானகி மாதாவிற்கு முழு அங்கீகாரம் அளித்ததை காண முடிந்தது. ❤️இந்து மத சம்பிரதாயப்படி, இம்மாதிரியான வைபவங்களில் ஞானி ஒருவர் விழாவிற்கு அழைத்தது,அவர் அந்த இடத்தைத் தொட்டு புனிதப்படுத்தச் செய்வது வழக்கம். ❤️பகவானது காரியங்களை நிர்வகிக்க ஆஷ்ரமத்தில் அறங்காவலர்கள் குழு ஒன்று இருந்தது. ❤️எனது தந்தை அதன் தலைவராக இருந்தார். ❤️இந்தக் குழு என்னை அழைத்து பகவானது ஸந்நிதியில் அமைந்துள்ள லிங்கத்தை புனிதப்படுத்த,ஜானகி மாதாவை அழைக்குமாறு கேட்டுக் கொண்டது. ❤️லிங்கத்தை தொட்டவுடனே பரவச நிலையை எய்தினார் ஜானகி மாதா. ❤️"ஜய் ரமணேசா...!"ரமண குரு" ரமணப்பா...!ரமண தேவா...!குரு ரமணா...!என்றெல்லாம் அவர் உரக்க விளித்தப் போது,அங்கிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களும்,விருந்தினர்களும் முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பேரானந்தத்தை அடைந்தனர். ❤️கும்பாபிஷேக விழாவில் அவரை சந்தித்த நான்,அவரது பாதங்களில் என் தலையை வைத்து வணங்கி, ஓ...!மாதா என்னை ஆசிர்வதியுங்கள், என்னை வழிநடத்துங்கள் என்று பிராத்தித்தேன். ❤️அவருடைய உபதேசங்கள் எனக்கு மிகவும் புனிதமானவை, பூஜிக்கத்தக்கவை. ❤️அவர் என்னிடம்,ஸத்குரு ரமணரின் திருப்பாதங்கள் இரண்டையும் இறுகப் பிடித்துக் கொள்! ❤️துன்பத்தில் உழலும் ஜீவன்களை காப்பாற்றுபவர் அவரே. ❤️அவருடைய உபதேசங்களை கடைபிடி. ❤️பகவானுடைய இரண்டு பாதங்கள் என்று குறிப்பிடும் போது அது, அவருடைய உபதேசங்களை அனுதினமும் பழகுவதேயாகும். ❤️அத்திருப்பாதங்கள் உன் இதயத்தில் எப்போதும் பதிந்திருக்க வேண்டும். ❤️இதயமே ரமணர்! என்று ஜானகி மாதா உபதேசித்தார். 🚩🕉🪷🙏🏻 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #சித்தர்கள் வாக்கு #மண்ணில் வாழ்ந்த மகான்கள்
பகவான் ரமணர் - ShareChat