ShareChat
click to see wallet page
search
பாதி வழியில் கைவிடுபவர்களை பாதி உணவில் நஞ்சூட்டுபவர்களை பாதி கனவில் தட்டி எழுப்புபவர்களை இனி நீ கோபித்துக்கொண்டு ஒரு பயனும் இல்லை அவர்கள்தான் மீதிப்பயணத்தை பிடிவாதமாய் கடந்து முடிக்க உன்னை ஊக்குவிக்கிறார்கள் அவர்கள்தான் சாவிலிருந்து வைராக்கியமாய் மீண்டுவர உன்னைத் தூண்டுகிறார்கள் அவர்கள்தான் விழித்துக்கொண்டே கனவு காண்பதெப்படியென உனக்குப் பயிற்றுவிக்கிறார்கள் சமயங்களில் அப்படித்தான் பளாரென உன் கன்னத்தில் அறைந்து இந்தக்காலம் உனக்கு கற்றுத்தருவதெல்லாம் உன் நன்மைக்காகத்தானே தவிர வேறில்லை ஆதலால் நன்றியுடன் இரு உன்னை கைவிட்டவர்களிடமும் துரோகித்து நகர்ந்தவர்களிடமும் கண்ணீர்த்தந்து காணாமல் போனவர்களிடமும் அவர்கள்தான் உன் வாழ்வை அவ்வளவு சுவாரசியமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் #💕Tamil Romantic status💖 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #💝இதயத்தின் துடிப்பு நீ #🥰மனதை மயக்கும் BGM🎹 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
💕Tamil Romantic status💖 - ShareChat