பிஹாரின் ஜமுய் மாவட்டத்தில், ஜசிடியில் இருந்து ஜாஜா நோக்கி சென்ற சரக்கு ரயில் ஒன்று, பருவா ஆற்றுப் பாலத்தின் மீது தடம் புரண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் இருந்த 42 பெட்டிகளில் 19 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டுத் தடம் புரண்ட நிலையில், அதில் 10 பெட்டிகள் ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தினால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. #🚆 ஆற்றுப் பாலத்தில் தடம் புரண்ட ரயில்

