இன்று *சூரிய பகவானின் ரத சப்தமி திருநாள்*
ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருபவர், சூரிய பகவான். ரத சப்தமி அன்று சூரிய பகவானை வழிபாடு செய்வதால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். சூரியனுக்கு உகந்ததாக எருக்கம் இலை உள்ளது. ரத சப்தமி அன்று, ஏழு எருக்கம் இலைகளை தலையில் வைத்து நீராட வேண்டும். இதனால் ஆரோக்கியமும், செல்வ வளமும் உண்டாகும்.
7 எருக்கம் இலைகளை நம் உடலில் வைத்து குளிப்பது பாவங்களை போக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு எருக்கன் இலையை தலையிலும், இரண்டை கண்களிலும், இரண்டை தோள்பட்டைகளிலும், கால் பாதங்களின் அடியில் இரு எருக்கன் இலைகள் என 7 எருக்கன் இலைகளையும் வைத்து குளிக்க #ரத சப்தமி🕉️ பீஷ்மாஷ்டமி🙏 #🙏கோவில் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓 #🖌பக்தி ஓவியம்🎨🙏 வேண்டும்.
அதேபோல் பெண்கள் தலையில் வைக்கும் எருக்கன் இலையின் மேல் சிறிது மஞ்சள் மற்றும் அரிசியையும், ஆண்கள் அட்சதை அல்லது விபூதியையும் வைத்து கிழக்கு நோக்கி நீராட வேண்டும். சூரியனின் ஏழு வகையான கிரணங்கள் எருக்கன் இலைகள் மூலமாக உடலில் பாய்ந்து உடல்நலத்தை வலுப்படுத்தும் என்பது ஐதீகம்.
00:45

