ShareChat
click to see wallet page
search
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*   *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 தை: 𝟬𝟵 🇮🇳꧂_*      *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜*             *_📆 𝟮𝟯•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟲   🦚_*         *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். விவசாய பணிகளில் சாதகமான சூழல்கள் ஏற்படும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். சமூகத்தில் பெரியோர்களின் அறிமுகங்கள் உருவாகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். உறுதி மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம். ⭐அஸ்வினி : சாதகமான நாள். ⭐பரணி : அறிமுகங்கள் கிடைக்கும். ⭐கிருத்திகை : சூழ்நிலையறிந்து செயல்படவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தடைபட்ட சில பணிகளை மாறுபட்ட முறையில் செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். பாராட்டு கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம். ⭐கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும். ⭐ரோகிணி : முன்னேற்றமான நாள். ⭐மிருகசீரிஷம் : அமைதியான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். முகத்தில் புதுவிதமான பொழிவுடன் காணப்படுவீர்கள். வியாபாரம் நிமித்தமான ரகசியங்களை பகிர வேண்டாம். மாறுபட்ட அனுபவங்களால் பக்குவம் உருவாகும். உயர் பதவிகளில் இருப்பவர்கள் அறிமுகங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உதவி கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம். ⭐மிருகசீரிஷம் : பொழிவுகள் மேம்படும். ⭐திருவாதிரை : அனுபவங்கள் கிடைக்கும். ⭐புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளி வட்டாரங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கவனம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம். ⭐புனர்பூசம் : புதுமையான நாள். ⭐பூசம் : அனுபவங்கள் கிடைக்கும். ⭐ஆயில்யம் : ஆதரவான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள் ஒருவிதமான மந்த தன்மையை ஏற்படுத்தும். திடீர் பயணம் மூலம் அலைச்சல் அதிகரிக்கும். தேவையில்லாத சிந்தனைகள் மூலம் மனதில் ஒருவிதமான தயக்கம் ஏற்படும். இணையம் முதலீடுகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். விவேகம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம். ⭐மகம் : சிந்தித்து செயல்படவும். ⭐பூரம் : அலைச்சல் அதிகரிக்கும். ⭐உத்திரம் : பொறுமையுடன் செயல்படவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். போட்டித் தேர்வுகள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தனம் மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம். ⭐உத்திரம் : நெருக்கடிகள் உண்டாகும். ⭐அஸ்தம் : அறிமுகம் உண்டாகும். ⭐சித்திரை : முன்னேற்றமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத பயணங்கள் மூலம் புது விதமான அனுபவங்கள் உருவாகும். உத்தியோகப் பணிகளில் எதிர்பார்த்த இடம் மாற்றம் சாதகமாகும். மகிழ்ச்சியை தரும் இடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். நிர்வாக ஆற்றல் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பரிவு வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம். ⭐சித்திரை : வேறுபாடுகள் குறையும். ⭐சுவாதி : மாற்றம் சாதகமாகும். ⭐விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* வித்தியாசமான கற்பனைகள் மூலம் மனதில் குழப்பம் உண்டாகும். எளிமையான சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். இணைய துறைகளில் மாற்றமான சூழல் ஏற்படும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். புதிய நபர்களின் தன்மைகளை அறிந்து நட்புகளை வைத்துக் கொள்ளவும். கூட்டு வியாபாரம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். நிறைவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐விசாகம் : குழப்பமான நாள். ⭐அனுஷம் : அனுபவம் வெளிப்படும். ⭐கேட்டை : சிந்தித்து செயல்படவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* இயந்திரம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உருவாகும். மனதில் புது விதமான வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். நிர்வாகத்தில் தனித்திறமை புலப்படும். மருத்துவ தொடர்பான துறைகளில் ஆர்வம் ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்‌. ⭐மூலம் : கவனம் வேண்டும். ⭐பூராடம் : ஆதரவு கிடைக்கும். ⭐உத்திராடம் : ஆர்வம் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* தொழிலில் புதிய வாய்ப்புகள் மூலம் முன்னேற்றத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். செயல்பாடுகளில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளை அறிவீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். சமூக பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோக தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். பணிவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம். ⭐உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும். ⭐திருவோணம் : முயற்சிகள் ஈடேறும். ⭐அவிட்டம் : சாதகமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* நண்பர்களின் வருகையால் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். மனை சார்ந்த கடனுதவிகள் சாதகமாக அமையும். வழக்கு செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபார நிமித்தமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைக்கான மதிப்புகள் கிடைக்கும். புதுவிதமான உடைகளின் சேர்க்கை ஏற்படும். நேர்மை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். ⭐அவிட்டம் : கலகலப்பான நாள். ⭐சதயம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ⭐பூரட்டாதி : மதிப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். நண்பர்களின் வருகைகள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். தேவையற்ற சிந்தனைகள் மூலம் சோர்வுகள் ஏற்படும். தவறிப் போன சில பொருட்களைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம். ⭐பூரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும். ⭐உத்திரட்டாதி : சோர்வான நாள். ⭐ரேவதி : நெருக்கம் அதிகரிக்கும். *┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈* #✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #👉🏼இன்றைய ராசிபலன்✡️
✡️ராசிபலன் - ShareChat