#✍️தமிழ் மன்றம் #✍️கவிதை📜 #📜கவிதையின் காதலர்கள் #📝என் இதய உணர்வுகள் #🙏நமது கலாச்சாரம்
பூமிப்பந்தின் சக்கரத்தில் பூவிநடுவினிலே வீற்றிருப்பவளே
தாமிரபரணி ஆற்றில் தவழ்ந்து ஓடுபவளே
கொற்றவை நீயே கோமகளும் நீயே
வற்றாத நீரூற்றுகள் வரமாய் தந்தாயே
மூகாம்பிகை தாயே முத்தமிழ் நீயே
ஆகாயம் எங்கும் அணுவாய் நீயே
மீனாட்சி தாயே மிளிரும் பேரொளி
தானாய் வந்தே தன்னம்பிக்கை தருவாயே
மாரியம்மா காளியம்மா மகமாயி நீயே
காரிருள் யாவும் கணப்பொழுதில் நீக்குவாயே
கன்னியாகுமரி பகவதி கற்பகமே நீயே
கன்னித்தமிழ் நீயே கலைவாணி நீயே
அலைமகள் மலைமகள் அம்மா நீயே
கலைகள் இலக்கியம் காவியம் நீயே
தமிழ்த்தாய் நீயே தரணியை ஆள்பவளே
தமிழே தீப்பொறி தாயே போற்றி
பறையடித்து குலவையிட பரவசம் தருவாயே
இறையே பரம்பொருள் நிறைவும் நீயே
உறுமி சத்தமிட்டு உடுக்கை அடிக்க
உறுதுணை புரியும் உமையாள் வருகவே
அம்மா தமிழர் ஆளவே அருள்க
உம்மிடம் கேட்டு உம்பாதம் பணிகிறோம்
மாற்றம் தரவே மகமாயி வந்திடம்மா
காற்றில் உலாவி காலமே வந்திடம்மா
தமிழைக் காத்திடவே தாயே எழுகவே
தமிழன்னை தாயே தமிழர் அழைக்கிறோம்
உறுதியாக வந்திடம்மா உன்னை நம்பிருக்கிறோம்
மறுமொழி இன்றி மாற்றம் நிகழவே
உன்பிள்ளை கேட்கின்றேன்
உத்தமியே வந்திடம்மா
இன்னருள் புரியுமே இனிமை பெருகவே
✍️ஆதி தமிழன்


