ShareChat
click to see wallet page
search
எலக்‌ஷன் என்சைக்ளோபீடியா! திருச்சி திமுக வெள்ளி விழா வெற்றி! திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை , மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி , துறையூர் ஆகிய 9 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய திருச்சி மாவட்டத்தின் மொத்தத் தொகுதிகளையும் 2021 தேர்தலில் திமுக கூட்டணி கைப்பற்றியது. ஓர் இடத்தில் கூட அதிமுக கூட்டணியால் வெற்றி பெற முடியவில்லை . அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்பட அதிமுக சார்பில் போட்டியிட்ட 9 வேட்பாளர்களும் தோல்வியைத் தழுவினார்கள். 1996 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 9 தொகுதிகளையும் கைப்பற்றியது. அப்போது தி ருச்சி-1 (இப்போது திருச்சி கிழக்கு) தொகுதியில் பரணிகுமார், திருச்சி-2 (இப்போது திருச்சி மேற்கு), அன்பில் பொய்யா மொழி , ஸ்ரீரங்கத்தில் தி.ப.மாயவன், லால்குடியில் கே.என்.நேரு, திருவெறும்பூரில் துரை, மருங்காபுரியில் (இப்போது மணப்பாறை) புலவர் செங்குட்டுவன், தொட்டியம் தொகுதியில் கண்ணையன், முசிறியில் ஜோதி கண்ணன், உப்பிலியபுரம் (இப்போது துறையூர்) தொகுதியில் கருப்பசாமி யும் வெற்றி பெற்றிருந்தனர். 25 ஆண்டுகள் கழித்து 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக. திருச்சி மாவட்டத்தில் மீண்டும் 100 சதவிகித வெற்றியைப் பெற்றது. 1996 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவால் எப்படி ஓர் இடத்தைக்கூடப் பெற முடியவில்லையோ, அதே போன்ற வரலாறு 2021-ல் மீண்டும் அதிமுகவுக்குத் திரும்பியது. 2021 தேர்தல் திருச்சியில் வென்றவர்கள்: 1. திருச்சி கிழக்கு - இனிகோ இருதயராஜ் (திமுக) 2. திருச்சி மேற்கு - கே.என்.நேரு (தி.முக) 3. ஸ்ரீரங்கம் - பழனியாண்டி (திமுக) 4. திருவெறும்பூர் - அன்பில் மகேஷ் பொய்யா மொழி (திமுக) 5. லால்குடி - சவுந்திரபாண்டியன் (திமுக) 6. மணப்பாறை - அப்துல் சமது (மனிதநேய மக்கள் கட்சி) 7. முசிறி - காடுவெட்டி தியாகராஜன் (திமுக) 8. மண்ணச்சநல்லூர் - கதிரவன் (திமுக) 9. துறையூர் - ஸ்டாலி ன் குமார் (திமுக) 2026 தேர்தலில் அதே சாதனையை திமுக நிகழ்த்துமா? திருச்சி மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளை கட்சிகள் கைப்பற்றும்? #🚨கற்றது அரசியல் ✌️ #🤭அரசியல் மீம்ஸ் #தமிழ்நாடு அரசியல் #📺அரசியல் 360🔴 #அரசியல்
🚨கற்றது அரசியல் ✌️ - ShareChat