#பக்தி🙏 #E&G #கவின்🙏 Kavin Life Associate® #☝️கவின்...✍️@இளையராஜா #தஞ்சை, திருக்கானூர்பட்டி. அஞ்சுதலை நீக்குமெங்கள்
ஆறுதலை...
தஞ்சமுறக் கொண்டுவரும்
மாறுதலை...(அஞ்சுதலை...)
நெஞ்சிலிதை நீக்கமற
நீயும் நினை...
எஞ்சியினி ஏதுபகை
ஓடும் வினை...2.(அஞ்சுதலை...)
ஈரேழு பதினான்கு
லோகங்களைக் காப்பவனைச்...
சீரோடு தினம்வாழ
ஸ்லோகங்களைச் சேர்ப்பவனைத்...2.
தீராத வினைதீர்க்க
ஆறுபடை ஆள்பவனை
மாறாமல் மனம்சேர்க்க
ஓடிவரும் வேலின் துணை...2.(அஞ்சுதலை...)
அமுதிங்கு காத்திருக்கும்
அருளிருக்க ஏதுபிழை...
அறமென்று பூத்திருக்கும்
அவனிருக்கத் தீது இல்லை...2.
வரமொன்று தான்கொடுக்க
வடிவிருக்கும் ஓதிமலை
வகைகண்டு நாம்வணங்க
விடிவளிக்கும் கவலை இல்லை...2.(அஞ்சுதலை...)


