ShareChat
click to see wallet page
search
இந்தியாவில் இருக்கும் வக்ஃபு சொத்துகளின் மதிப்பு இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் தெரியாததை போல நடிக்கிறார்களா? என்று தெரியவில்லை. இந்தியாவில் அதிக பரப்பளவு நிலங்களை வைத்திருப்பது இந்திய அரசு என்று சொல்லலாம். இந்திய அரசாங்கத்திற்கு அடுத்தபடியாக அதிக பரப்பளவு கொண்ட நிலங்களை வைத்திருப்பது இந்திய கிருஸ்துவ கத்தோலிக்க சபை இது சுமார் 17.29 கோடி ஏக்கர் (7 கோடி ஹெக்டேர்) என மதிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவது இடம் வக்ஃபு வாரியம். இந்தியாவில் மொத்தம் 40 இலட்சம் ஏக்கர் வக்ஃபு நிலங்கள் இருக்கின்றன. இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை மூலம் கத்தோலிக்க திருச்சபையானது நிர்வகிக்கப்படுகிறது. தரவுகளின்படி 2012-ல், கத்தோலிக்க திருச்சபையின் கீழ், இந்தியாவில் 2,457 மருந்தகங்கள், 240 மருத்துவ அல்லது நர்சிங் கல்லூரிகள், 28 பொதுக் கல்லூரிகள், 5 பொறியியல் கல்லூரிகள், 3,765 மேல்நிலைப் பள்ளிகள், 7,319 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 3,187 நர்சரிப் பள்ளிகள் உள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள வக்ஃபு வாரியங்களால் பெரிதாக எந்த மாநிலத்திலும் கல்வி நிலையங்கள் மருத்துவ மனைகள் ஏற்படுத்தப்பட வில்லை என்று சொல்லலாம் . ஜம்மு காஷ்மீர் மாநில வக்ஃபு வாரியத்திற்கு உட்பட்டு பிபி ஹலிமா நர்சிங் கல்லூரி, ஆலம் தார் நர்சிங் கல்லூரி, சையத் மந்தாகி நர்சிங் கல்லூரி, சுல்தான்-உல்-ஆரிஃபீன் உயர்நிலைப் பள்ளி மற்றும் மந்தாகி நினைவு மேல்நிலைப் பள்ளி போன்றவை செயல்படுகின்றன. தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் மூலம் மதுரை வக்ஃபு கல்லூரி செயல்பட்டது தற்போது அது முறையாக செயல்படுவதில்லை பல்வேறு சிக்கல்களோடு உள்ளது. இந்தியாவில் சுமார் 38000 ம் மதரசாக்கள் இருப்பதாக கணக்கிடபடட்டுள்ளது அதில் 60 சதவீத மதரசாக்கள் உத்திரப்பிரதேசத்தில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு உட்பட்ட சொத்துகள் அதிகமாக ஆக்கிரமிப்பிற்கு உள்ளானதாக இல்லை காரணம் அந்த சொத்துக்கள் முழுமையாக சுற்றுச்சுவர் கட்டி நீண்ட காலமாக திட்டமிட்டு நிர்வகிக்கப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபை நிர்வாகத்தில் முறைகேடுகள் இருந்தாலும் அவை வக்ஃபு வாரிய முறைகேடுகள் மற்றும் பொறுபற்ற தன்மையோடு ஒப்பிடும் பொழுது அது பெரியளவில் இல்லை என்று சொல்லலாம். கத்தோலிக்க திருச்சபை சொத்துகளை கண்காணிக்க வக்ஃபு வாரியம் போல ஒரு அதிகார அமைப்பு இல்லை. இஸ்லாமிய மக்களுக்கு வக்ஃபு சொத்துகளை கண்காணிக்க பாதுகாக்க வக்ஃபு வாரிய அமைப்புகள் இருந்தாலும் அந்த வக்ஃபு வாரியங்கள் வக்ஃபு சொத்துகளை பாதுகாப்பை விட நாசம் செய்யும் அமைப்புகளாக இருக்கின்றன. வக்ஃபு வாரியங்களே தேவையில்லை அவற்றை வக்ஃபு சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் அல்லது வக்ஃபு வாரிய முறைகேடுகளை விசாரணை செய்திட ஒரு ஊழல் கண்காணிப்பு பிரிவு உருவாக்கிட வேண்டும் என்பதே கோரிக்கையாக இருக்கிறது. - --- #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
💝இதயத்தின் துடிப்பு நீ - ShareChat