ShareChat
click to see wallet page
search
சூரியனுக்கு களங்கம் உண்டோ அதிலும் ஞான சூரியனுக்கு. நேத்திக்கு ஞாயிற்றுக்கிழமை மறந்துபோய் ராத்திரி பால் சாப்டுட்டேன்... தப்பு... தப்பு. ஒரு மாத காலத்துக்கு பால் பழங்களை தவிர்த்த பெரியவா பிராயச்சித்தமாம். ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு பெரியவாள் பிக்ஷை ஏதும் செய்வதில்லை பால் கூட அருந்துவதில்லை. பெல்காம் அருகில் ஸாம்ரா என்று ஓர் ஊர் பக்தர்கள் வந்து குறைகளைச் சொல்லி ஆசி பெற்றுக்கொண்டு சென்ற வண்ணமிருந்தார்கள். எல்லோருக்கும் பதில் சொல்லிச் சொல்லி பெரியவாளுக்குத் தொண்டை வலிக்குமே என்ற கவலை அணுக்கத் தொண்டருக்கு. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பது ஞாபகமில்லை பெரியவா ஓய்வுக்காக உள்ளே வந்ததும் பால் கொண்டு வந்து வைத்தார் தொண்டர். மறு நாள் காலை ஆகா....ஆகா என்று பதறினாற் போல் சொன்னார்கள் பெரியவா தொண்டர்களுக்குத் திக் என்றது. நேத்திக்கு ஞாயிற்றுக்கிழமை மறந்துபோய் ராத்திரி பால் சாப்டுட்டேன்...தப்பு...தப்பு. அன்று முதல் ஒரு மாத காலத்துக்கு பால் பழங்களைத் தவிர்த்தார்கள் பெரியவா பிராயச்சித்தமாம். சூரியனுக்கு களங்கம் உண்டோ அதிலும் ஞான சூரியனுக்கு. "ஜெய சங்கர ஹர ஹர சங்கர" #periyava #mahaperiyava #truestory #kanchimahaperiyava #kanchimahan #kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman #mahaperiyavamagimaigal #sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்
jai mahaperiyava - ShareChat
00:29