தமிழக வெற்றிக் கழகம் பஹ்ரைன் பிரிவு சார்பில் நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாமை நடத்தியுள்ளது:
பஹ்ரைனின் 54-வது தேசிய தினத்தை முன்னிட்டு சல்மானிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விஜய் மக்கள் இயக்கமும், தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்தானம் செய்தார்கள்.
அவர்கள் அனைவருக்கும் பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் என்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர். பஹ்ரைனில் டிசம்பர்-16 மற்றும் டிசம்பர்-17 ஆகிய இரு தினங்கள் தேசியதின கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️


