ShareChat
click to see wallet page
search
சிவமணியம் கேள்வி: நான்கற எண்ணம் இல்லைன்னா எப்படி வேலை நடக்கும்? பகவான்: முதல்லே 'நான்' போகட்டும். அப்புறம் வேலை நடக்கறதா இல்லையான்னு பாக்கலாம். கேள்வி: சங்கரர் துறவைத்தான் வலியுறுத்துறார். 'கர்மங்களை துறந்துடு'ன்னுதான சொல்றார்? பகவான்: ஆமாம். துறவைத்தான் உபதேசிக்கறார். ஆனா அவர் நிறைய பாஷ்யங்கள், சாஸ்திரங்கள், ஸ்துதின்னு நிறைய வேலை பாத்திருக்காரே! நிறைய வாதங்கள் செஞ்சு சன்மதத்தை ஸ்தாபிச்சார்ன்னே சொல்றா! வேலையைச் செய்வோமா? விட்டுடுவோமா?ன்னு தேவையில்லாமே சிரமப்படுத்திக்காதேள்! நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கோங்கோ! அப்புறம் இந்த வேலையெல்லாம் யாரோடதுன்னு தெரியும்! யாரு செய்யறதுன்னும் தெரியும். வேலை தானே நடக்கும். செய்யறவன் நான்தான்னு நினைச்சா... அதுக்கான கர்மபலனை அனுபவிச்சே தீரணும். செய்யறவன் நான்கற நினைப்பு போயிடுத்துன்னா... நம்மளோட வேலைன்னு ஒரு வேலையும் இல்லை. அவன்தான் உண்மையான துறவி; சன்யாசி. கர்மத்தைத் துறந்தவன் சன்யாசி இல்லே. கர்த்துருத்துவத்தை துறந்தவன்தான் உண்மையிலே சன்யாசி. கேள்வி: அகந்தை எப்படிக் கிளம்பறது? பகவான்: உண்மை இங்கேயே இப்போவே இருக்குங்கறேன்... அதைப் பாக்கறத விட்டுட்டு தேவையில்லாததை எல்லாம் யோசிக்கறே! அகந்தை எப்படிக் கிளம்பறது? இப்படித்தான். தேவையில்லாத கேள்வியைக் கேட்டுக் கொண்டு ! கேள்வி: உலகம் உண்மையிலேயே இருக்கா? எனக்கு உலகம் உண்மைன்னுதான் தோணுது. பகவான்: ஆமா! உலகம் உங்களிடம் வந்து சொல்லித்து, 'நான் இருக்கேன்... நான் உண்மை... 'ன்னு. உலகம் நமக்குள்ளே இருக்க... நமக்கு வெளியே இருக்கா? நம்மள விட்டு தனியா இருக்கா ? கேள்வி: இது நம்ம கர்மந்தானா இல்லையான்னு எப்படி தெரிஞ்சுக்கறது? பகவான்: அது நம்மளப் பாதிக்கும். அதிலேயே தெரிஞ்சுக்கலாம். பாதிக்கலேன்னா அவன் கர்மம் இல்லை. கேள்வி: உண்மையைப் புத்திபூர்வமா தெரிஞ்சுக்கறது போதுமா? பகவான்: புத்திபூர்வமா தெரிஞ்சுக்காமே எப்படி அப்பியாசம் பண்ணுவேள்! முதல்லே புத்திபூர்வமா தெரிஞ்சுக்கோங்கோ! அதை அப்பியாசிங்கோ! அனுபவத்துக்குக் கொண்டு வாங்கோ! பகவான் யாரும் கேள்வி எதுவும் கேட்காமல் பொதுவா பேசினது. பகவான்: நாம பொதுவா இல்லாம, ஒரு சித்தாந்தத்துக்குன்னு நின்னா... மத்தவா சித்தாந்தத்தை கண்டனம் பண்ணனும். அது எல்லாம் மடாதிபதிகளோட சமாச்சாரம். தொல்லை. நாம எப்பவும் பொதுவா நிக்கணும். எல்லாரும் எல்லாத்தையும் செய்ய முடியாது. அவா அவாளோட பூர்வ ஸம்ஸ்காரத்தையும், பக்குவத்தையும் பொறுத்து வேறுபடுவா. ஒருத்தருக்கு ஞானம் எளிமையா தெரியும். ஒருத்தருக்கு பக்தி, ஒருத்தருக்கு தியானம், ஒருத்தருக்கு கர்மம். வாஸ்தவத்திலே ஞானம்,பக்தி, தியானம், கர்மம் எல்லாம் ஒண்ணோட ஒண்ணு பின்னிப் பிணைஞ்சது. ஆரம்பத்திலே எடுத்த எடுப்பிலேயே ஹிருதயத்திலே, நிர்க்குணத்திலே நின்னுட முடியாது. சகுணத்திலே மனசு பிடிபட்டாதான்.... மத்த சிந்தனை போகும். சகுணத்திலே மனசு ததாகாரமாகும்போதுதான்... நிர்க்குணம் பிடிபடும். அதனாலே எல்லா வழியும் அவசியம். பகவத்கீதையிலே முதல்லே எடுத்த உடனேயே கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இப்படித்தான் சொல்றார். "உனக்கு, எனக்கும், யாருக்கும் இங்கே பிறப்புமில்லே; இறப்புமில்லே." அப்புறம் அவரே "ஆதித்தனுக்கு முன்னாடியே நான் பிறந்தேன். எனக்கு என்னோட எல்லாப் பிறப்பும் தெரியும், உனக்குத் தெரியாது"ங்கறார். நீ இப்போதானே பிறந்தே! எப்போ ஆதித்தனுக்கு முன்னாடி பிறந்தே'ன்னு அர்ஜுனன் ஒத்துக்க மாட்டேங்கறான். என்னதான், உள்ளதை உள்ளபடி சொன்னாலும், அவனவன் பக்குவத்துக்கு ஏத்த மாதிரிதான் கிரஹிப்பான். முழிச்சுக்கொண்டு இருக்கும் போது 'இந்த உடம்புதான் நான் 'ன்னு சொல்றா! கனவிலே வேற உடம்பை நான்ன்னு சொல்றா! தூங்கறப்போ உடம்பே இல்லாம இருக்கே! ஜீவனுக்கே இத்தனை உடம்பு, இத்தனை விசேஷம் இருக்கும்போது ஈஸ்வரனுக்கு இருக்காதா? எந்த மார்க்கமா இருந்தாலும் பெரியவா அதை ஊக்குவிக்கத்தான் செய்வா! எல்லா மார்க்கமும் ஒரே இடத்திலேதான் சேர்க்கும். கேள்வி: சொர்க்கம், நரகம் எல்லாம் இருக்கா? பகவான்: அங்கேயெல்லாம் போறதுக்கு யாரோ ஒருத்தன் இருக்கணுமே... அவன் யாருன்னு பாருங்கோ! வீட்டுலே தூங்கும்போது சொப்பனத்துலே இன்னொரு இடத்துலே இருக்கறமாதிரி இருக்கு. நாம இந்த நனவு இடத்தை விட்டுக் கனவு இடத்துக்குப் போனோமா? இல்லே கனவு இடம் இங்கே வந்துதா ? எது உண்மை? கனவா இல்லே நனவா? கேள்வி: காமத்தை விட வேண்டாமா? பகவான்: இந்த நினைப்பை விடுங்கோ. வேற எதையும் விடவேண்டாம். எதைப் பாத்து சலனப்படறதுக்கும் நீங்க இருக்கணும். எதைப் பாத்து சலனப்பட்டாலும், சலனப்படறதுக்கு முன்னாடியும், சலனப்படறபோதும், சலனம் முடிஞ்ச பிறகும் நீ..... ன்னு ஒண்ணு சர்வசாதாரணமா இருக்குமில்லையா..... அதுதான் ஆத்மா. அதுக்கு எந்த சலனமும் இல்லே. காமமும் இல்லே. அதுதான் நான். அது எப்பவும் அறிவு மாத்திரமா இருக்கு. பக்கம்: 45 - 48. அப்பனேஅருணாசலம். 🚩🕉🪷🙏🏻 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #மண்ணில் வாழ்ந்த மகான்கள் #🙏ஆன்மீகம்
பகவான் ரமணர் - சிவமணியம் சிவமணியம் - ShareChat