மதுமலர் நிறைகொடி கையிலேந்தும்
மாட்சிமை நிறை சூசை மாமுனியே
துதி வளர் உமது நற்பதம் வந்தோம்
துணைசெய் தெம்மையாளும் தாதையரே
#தொழிலாளர்களின்_பாதுகாவலரான_புனித_சூசையப்பரே...
#எங்கள்_குடும்பத்தையும்_தொழிலையும்__ஆசீர்வதியும்.
பிதா சுதன் பரிசுத்த ஆவியாரின் திருப்பெயராலே ...ஆமென்.
#புனித_சூசையே...
எங்கள் குடும்பத்தின் பாதுகாவலரே...
இன்று எங்கள் குடும்பத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன்.
எங்கள் குடும்பங்களை ஆசீர்வதியும்.
உம் திருமகன் இயேசுவுக்கு நாங்கள்...
சாட்சியாக வாழ வரம் தாரும்.
#தூய_வளனாரே...
எங்கள் குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றத்தை கொடையென பெற்றுத் தாரும்.
நோய் நெடி பேராபத்துகளில் இருந்து எங்களை பாதுகாத்தருளும்.
நலிவுற்றுள்ள எங்கள் தொழில்கள் செழிக்க எங்களுக்காக இயேசுவை மன்றாடும்.
#திருக்குடும்ப_காவலரே...
படிக்கின்ற பிள்ளைகளுக்கு நல்ல ஞானத்தையும் ...ஞாபக சக்தியை தாரும்.
எங்கள் சிறு பிள்ளைகள் கடவுளுங்கு அஞ்சி நடக்கவும்...
ஒழுக்கத்தில் சிறந்து வளர ஆசீர்வதியும்.
திருமணதிற்காக காத்திருப்போருக்கு நல்ல மண வாழ்க்கையையும்...
அவர்கள் சந்ததி கடற்கரை மணலைப் போல் பழுகி பெருகச் செய்யும்
#புனித_சூசையே...
எங்கள் வாழ்வின் எல்லா இன்ப துன்ப நேரத்தில் துணையாக இருக்கும்படியாக உம்மை கெஞ்சி மன்றாடுகின்றேன்.
#ஆமென்_1பர_1அருள்... #✝️இயேசுவே ஜீவன்


