ShareChat
click to see wallet page
search
#🌻வாழ்த்துக்கள்💐 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 பிறந்த நாள் கானும்.. ராகேஷ் ஷர்மா 👉 விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற ராகேஷ் ஷர்மா 1949ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டத்தில் பிறந்தார். 👉 இவர் 1970ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் பயிற்சி பைலட்டாகப் பணியேற்றார். ஒரு விண்வெளி வீரராக அவருடைய பயணம் 1982ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கியது. 👉இதன் விளைவாக ராகேஷ், 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி சரித்திரத்தின் சாதனைப் பக்கத்தில் இடம் பிடித்தார். பிறகு சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் பைலட்டாக இருந்த அனுபவத்தின் காரணமாக 1984ஆம் ஆண்டில் விமானப் படைப்பிரிவின் ஒரு குழுவுக்கு ராகேஷ் தலைவராக நியமிக்கப்பட்டார். 👉 இவரும், ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவரும் சோயுஸ் டி 11 விண்கலத்தில் விண்வெளிக்குப் பயணம் சென்றார்கள். சல்யூட் 7 என்னும் விண்வெளி மையத்தில் இவர் எட்டு நாட்கள் தங்கியிருந்தார். ராகேஷ் சர்மா அவர்களின் பணிகளை பாராட்டி அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.
🌻வாழ்த்துக்கள்💐 - ShareChat