ShareChat
click to see wallet page
search
உயர்ந்த தர்மம் பூலோகத்தில் மரணத்துக்குப் பின் மேலுலகம் சென்ற கர்ணன், சூரிய லோகத்தில் உள்ள தன் தந்தை சூரியனின் இருப்பிடத்தை அடைந்தான். தந்தையே, நான் என் நண்பன் துரியோதனனுக்கு, செஞ்சோற்றுக் கடன் தீர்த்த தர்மத்தைக் காப்பற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தர்மத்திற்காக, துரியோதனன் பக்கம் இருந்து போர் புரிந்தேன். ஆனால் வஞ்சகன் கிருஷ்ணர், என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டார். இதன் காரணம் எனக்கு புரியவில்லை என்று புலம்பினான். அதற்கு சூரிய பகவான், கர்ணா, கிருஷ்ணரை வஞ்சகன் என்று சொல்லாதே நீ ஒரு தவறு செய்து விட்டாய். : செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கிருஷ்ணர் உயர்ந்த தர்மமாக விளங்குபவன். உயர்ந்த தர்மம் மற்றும் செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மம் என்ற இரண்டு தர்மங்களில் எதைக் காப்பாற்ற வேண்டும் என்று வருகையில், உயர்ந்த தர்மத்தையே கிருஷ்ணன் காப்பாற்ற எண்ணுகிறான். நீ சாமானிய தர்மத்தைக் காப்பாற்ற எண்ணி, உயர்ந்த தர்மத்தைக் கைவிட்டாய், அதனால் தான் அழிந்தாய். மற்ற உயிர்கள் அனைத்துக்கும் தீங்கு செய்யாமல் வாழ்வதே உயர்ந்த தர்மம்.. #காலை வணக்கம் ❤️❤️❤️
காலை வணக்கம் ❤️❤️❤️ - தை 8 22/01/26 வளர்பிறை சதுர்த்தி R SVKVIR குரு தெடிணாமூரீ்த்தி ஆசியுபன் இனிய நாளாக மலாபீடும இந்த நாள் வெற்றி வியாழக்கிழமை தரும் அன்புடன் காலை வணக்கம் தை 8 22/01/26 வளர்பிறை சதுர்த்தி R SVKVIR குரு தெடிணாமூரீ்த்தி ஆசியுபன் இனிய நாளாக மலாபீடும இந்த நாள் வெற்றி வியாழக்கிழமை தரும் அன்புடன் காலை வணக்கம் - ShareChat