#காங்கிரஸ் 2021 ம் ஆண்டு தேர்தலில் திமுக + 12 கட்சிகள்..
ஆக மொத்தம் 13 கட்சிகள் இணைந்து தான் இந்த கூட்டணியால் வெற்றி பெற முடிந்தது.
#திமுக + 12 கட்சிகள்
37.70% வாக்குகள்
#அதிமுக + 9 கட்சிகள் 33.29% வாக்குகள்
குறிப்பு : அதிமுகவை சேர்ந்த டிடிவி தனித்து நின்றார்.
அதிமுகவில் சிலுவம்பாளையம் எடப்பாடி எம்ஜிஆர்..ஜெயலலிதா போன்று மக்களை கவர்ந்த தலைவர் அல்ல..
வெற்றி வித்தியாசம் 4.41% வாக்குகள்.
2021 தேர்தலில் சிறுபான்மையினர் 95% வாக்குகள் திமுக + 12 கட்சிகளின் கூட்டணிக்கே கிடைத்தது.
இம்முறை விஜய் கட்சியும் போட்டியிடுவதால் கணிசமான இளைஞர்கள் வாக்குகளும்..
சிறுபான்மையினர் வாக்குகளும் சரிசமமாக விஜய்க்கு செல்லும்.
1991 ல் கடலாடியிலிருந்து காளிமுத்து வருவார் என துறைமுகத்தில் காத்திருந்த கருணாநிதிக்கு தோல்வியே கிடைத்தது.
2001 ல் தாமரையோடு சூரியன் சேர்ந்ததால் திமுகவுக்கு கூடா நட்பு கேடாய் முடிந்து போனது.
2006 ல் திமுக 96 ல் வென்று காங்கிரஸ் 34 தயவுடன் மைனாரிட்டி திமுக ஆட்சி 5 ஆண்டு கரைசேர்ந்தது.
2011 ல் திமுகவிற்க்கு மாபெரும் தோல்வி இலவசமாக தொலைக்காட்சி கொடுத்ததை காட்டிலும் தொல்லைக்காட்சிகளை மக்கள் அனுபவித்ததின் விளைவு.
2016 ல் பால் நழுவி பழத்தில் விழும் என்று காத்திருந்த கருணாநிதிக்கு அல்வா கொடுத்த விஜய்காந்த்.
இப்படி தமிழ்நாட்டு அரசியலில் திமுக தனித்து களம் காணாமல் கூட்டணி அமைத்தும் படுதோல்வியாகவும் வெற்றியும் 3 - 4% வாக்கு வித்தியாசங்களிலேயே உள்ளது.
2026 தேர்தல் கடுமையாக இருக்கும்.
திமுகவை தோற்கடிக்க வேண்டும் என ஆக்டோபஸ் கட்சியான பாஜகவும்..
பரம எதிரியான அதிமுக கூட்டணியும்..
விஜய்..
சீமான்..
ஸ்டாலின் கருணாநிதி போன்று காத்திருந்து வீழ்வாரா?? மீள்வாரா??
அமைய இருக்கும் கூட்டணியை பொருத்துதான் வெற்றி நாற்காலி..


