#😋மழைக்கால ஸ்பெஷல் ரெசிபி🥙 வகையான ஊர் ஸ்பெஷல் கரம் மசாலா செய்வது எப்படி
---
1) செட்டிநாடு ஸ்பெஷல் கரம் மசாலா
தேவையான பொருட்கள்:
லவங்கம் 10
ஏலக்காய் 10
பட்டை 4 துண்டு
கருப்பு மிளகு 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் 2 டீஸ்பூன்
மல்லி விதை 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
ஜாதிக்காய் சிறிது
செய்முறை:
1. எல்லா மசாலாவையும் கடாயில் வாசனை வரும் வரை வறுக்கவும்.
2. முழுவதும் ஆற விடவும்.
3. மிக்ஸியில் நன்றாக பொடியாக அரைக்கவும்.
4. காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்.
---
2) ஹோட்டல் ஸ்டைல் மென்மையான கரம் மசாலா
தேவையான பொருட்கள்:
கருப்பு மிளகு 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் 1½ டீஸ்பூன்
ஏலக்காய் 8
லவங்கம் 8
பட்டை 3 துண்டு
மல்லி விதை 1½ டேபிள்ஸ்பூன்
ஜாதிப்பத்திரி 1
செய்முறை:
1. எல்லா பொருட்களையும் மிதமான தீயில் லேசாக வறுக்கவும்.
2. குளிர்ந்ததும் பொடியாக அரைக்கவும்.
3. சின்ன ஜாலியில் சலித்து மென்மையான பொடி எடுக்கவும்.
4. பிரியாணி, கிரேவி, சுக்கா எல்லாத்துக்கும் பயன்படுத்தலாம் 😋


