ShareChat
click to see wallet page
search
#புனித_ஜார்ஜ்_கோட்டை #ஜனவரி_9 ஜனவரி 9, 1921 - புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை மாகாண சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது(1921) புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George), இந்தியாவில் ஆங்கிலேயர்களின் முதலாவது கோட்டையாகும்.பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் முயற்சியால் 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் (இன்றைய சென்னை நகரம்) கட்டத் தொடங்கப்பட்டது. வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும். இந்தக் கோட்டை யில் தான். தமிழகத்தின் முதல் சட்டசபை 1921ஆம் ஆண்டுஉருவாக்கப்பட்டது. அதற்கு மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்றுபெயர். இந்த சட்டமன்றத்தின் கூட்டம் முதல்முறையாக புனித ஜார்ஜ் கோட்டையில்,1921ஆம் ஆண்டு ஜனவரி 9ந் தேதி கூடியது. ஆர்தர் வில்லியம் பேட்ரிக் என்ற பெயர் கொண்ட கன்னாட் கோமகன் (Duke of Connaught) இதை தொடங்கி வைத்தார். #life #lifes
life - ShareChat