"நிறைவு பகுதி"
மற்றவர்களுக்கு அடுத்தடுத்த வீடுகளில் தலை வாழை இலையில் சாம்பார் ரசம் பொரியல் கூட்டு பொரித்த அப்பளம் வடை பாயசம் என்று அமர்க்களப்பட்டது.
செய்தி கேள்விப்பட்டு உள்ளூரிலிருந்தும் பக்கத்து கிராமங்களிலிருந்தும் சாரி சாரியாக மக்கள் வந்த வண்ணமிருந்தனர்.
மிராசுகளும் விவசாயிகளும் தொழிலாளர்களும் வந்தனர். ஒரு மூதாட்டி மடியில் கட்டி
வந்த தன் கூலி நெல்லை சுவாமியின் முன் சமர்ப்பித்து தெண்டனிட்டார்.
பழங்களும் தாமரைப் பூவுமாய் மக்கள் கொண்ட வந்த காணிக்கைகளால் திண்ணை நிறைந்துவிட்டது.
வடக்க இந்து முஸ்லிம் கலவரம் சதா நடந்திண்டிருக்கு ஒயரதே இல்லை ரத்த வெள்ளம் தான் அமைதியே இல்லை அமைதி உண்டாக பெரியவா தான் மனசு வைக்கணும்.
நம்ம ஊர்லயே மத மாற்றம் நிறைய நடக்க ஆரம்பிச்சாச்சு சிலுவைக்கு பாதி மசூதிக்கு பாதின்னு நிறைய மனுஷா மாறிண்டிருக்கா தடுத்து நிப்பாட்டணும் ஏதாவது வழி ஊர் மக்கள் கொட்டித் தீர்த்தார்கள்.
சாது எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டது மௌனமாய். விருப்பப்பட்டால் ஒரு பூவோ ஒரு துளசி விள்ளலோ ஒரு எலுமிச்சை பழத்தையோ எடுத்துக் கொடுத்தது.
சிலருக்கு அதுவும் கிடையாது ஆனால் யாருக்கும் ஒரு வார்த்தை வாய் திறக்க வில்லை இடையில் மாலியை சைகை செய்து கூப்பிட்டார் லிங்க வடிவில் அபினயம் செய்து கோபுர வடிவில் கைகளை உயர்த்தி எங்கே என்று வலது கை மடித்துக் கேட்டார்.
மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் மௌனமாய் நின்றனர் மாலி கற்பூரமாய் புரிந்து கொண்ட கூட்டத்தைப் பார்த்து கேட்டார்
இந்த ஊரில் சிவன் கோவில் எங்க இருக்கு கூட்டம் விழித்தது ஒருவருக்கும் தெரியவில்லை.
இந்தூர்ல ஒரு அய்யனார் கோயில் ஒரு மாரியம்மன் கோயில் ஒரு பெருமாள் கோயில் நத்தம் எல்லையில் ஒரு பிள்ளையார் கோயில் தான் உண்டு சிவன் கோயில் இல்லையே என்றார் தொன்னூரு வயது ரெங்கண்ணா.
இருந்திருக்கு நிச்சயமா தெருவின் மேல் கோடீல பெருமாள் கோவில் இருந்தா கீழ்க்கோடீல கண்டிப்பா சிவன் கோவில் இருந்திருக்கணுமே
இருந்தது கண்டிப்பா இருந்திருக்கு.
பதில் சொல்லத் தெரியாமல் கூட்டம் விழித்தது குழப்பமான மௌனம் நிலவியது அங்கே சிவன் கோவில் எங்கே எப்பொழுது இப்பொழுது எங்கே எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் லத்திஃப்பாயும் அவர் மனைவி
மெகருன்னிசாவும் வந்தனர். கொண்டு வந்திருந்த பேயன் பழம் இரண்டு சீப்பையும் கொழுந்து வெற்றிலை ஒரு கவுளியையும் அப்பொழுது தான் பறித்த இரண்டு ரோஜாப் பூக்களையும் சுவாமி முன் வைத்து வந்தனம் செய்தனர்.
தாமரைக் கண்கள் வந்தவர்களை பாதாதி கேசம் உற்றுப் பார்த்தது ஊடுருவிப் பார்த்தது ஆசிர்வதித்தது குளிறப் பண்ணிற்று லத்திஃபும் அவர் மனைவியும் மெய்மறந்து நின்றனர்.
நேற்று கொல்லைப்புறம் செத்தி கொத்திய பொழுது மண்வெட்டியில் ஏதோ தட்டுப்படடது கடப்பாறையைக் கொண்டு அழத்தோண்டி பார்த்தபொழுது பெரிய சிவலிங்கம் ஒன்று தட்டுப்பட்டது.
அடுத்து தளவரிசை படிந்து போன கருங்கற் தூண்கள் பின்னால் பாழடைந்த கிணறு என்று ஒவ்வொன்றாய்த் தட்டுப்பட்டது எனக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை.
ஒரே கலக்கமாகவும் இருந்தது என்ன செய்றது அல்லாவேன்னு ராத்திரி முழுக்க விசனப்பட்டு உட்கார்ந்திருந்த போது தான் பெரியவர் வந்திருக்கும் செய்தி வந்தது.
இதற்குமேல் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் தான் கூற வேண்டும்
லத்திஃப் சொல்லச் சொல்லக் கூட்டம் மெய்மறந்து உட்கார்ந்திருந்தது.
பல நூற்றாண்டுகளுக்கு முன் சிவன்கோயில் அங்கு இருந்திருக்கிறது. காலப்போக்கில் கவனிப்பாரில்லாது சிதிலற்று மண்ணுள் புதைந்து மறைந்து விட்டது.
எங்க வாப்பா பள்ளிவாசல் நிலங்களை சாகுபடி செய்யும்பொழுது கூடவே கோவில் நிலங்களையும் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்தாக நெல் அளக்கும் போது ஒரு மரக்கால் கூட குறையாம அளப்பாக சிவ சொத்து குல நாசம்ன்னு சொல்லி அல்லா சாட்சியா அத்தனை நேர்மையா அளப்பாக.
எனக்கும் அதே தர்ம புத்தி நியாபுத்தி உண்டு அப்படியும் பொறந்த ஒத்த பொம்பள புள்ளையும் மன வளர்ச்சி இல்லாததாவே இருந்து பத்து வருஷத்துக்கு முன்ன செத்து போச்சி.
அறியாம செய்த பாவத்துக்கே அந்த கூலி தெரிஞ்சும் பாவம் செய்ய மனம் ஒப்பலை மனசார எழுதித்தர்ரேன் எனக்கு பறம் பைசா வேண்டாம்.
சுயநினைவோட சுத்த மனசோட தர்ரேன் பழையபடி அங்க சிவன் கோவில் கட்டிக்குங்க ஊர் ஜனத்துக்கு பயன்பட்டா அல்லா சந்தோஷப்படுவார்.
இந்தாங்க கோவில் கட்ட எங்களால் ஆன் பணம் 101 இதை முதல் வரவா வச்சிகிங்க என்று வெற்றிலை பாக்கு தட்டில் வைத்து அவர் கொடுத்த பொழுத கூட்டத்தில் எல்லோருக்கும் உடம்பு சிலிர்த்தது.
படிக்கும் பையன்களிடமிருந்து ஸ்லேட்டும் குச்சியும் தருவிக்கப்பட்டு பெரியவாளிடம் கொடுக்கப்பட்டது.
மார்க்கக் கடமையை முடித்துவிட்டீர்களா ஸ்லேட் லத்தீஃப் தம்பதியை நோக்கித் திரும்பியது.
இன்னும் இல்லை பாவியாகத் தான் இருக்கோம் அதுக்குண்டான வசதியை இன்னும் அல்லா எங்களுக்குக் கொடுக்கலை.
பல வருஷமா எத்தனையோ முயற்சி பண்ணியும் மெக்கா மதீனா போறது இன்னைக்கு வரைக்கும் கனவாத்தான் இருக்கு இதைச் சொல்லம் பொழுது லத்தீஃப்பாய் மனைவியின் குரல் தழுதழுத்தது.
பெரியவா வைத்தாவைப் பார்த்தார் பார்வையின் பொருள் புரிந்த வைத்தா கூட்டத்தைப் பார்த்து இந்த உயர்ந்த மனிதர்களிடமிருந்து கோயில் கட்ட இடத்தை இனாமா வாங்கிக்கறேளளே.
பிறதியா நாம ஒண்ணும் செய்யவாண்டாமா அவாளுக்கு
பரபரவென்று யோசித்து சடாரென்று முடிவு செய்து அவங்க புனிதப் பயணம் போய் வர்ர செலவு அத்தனையும் எங்களோடுது ஏகமனதாய் கூட்டம் சொல்ல திண்ணையில் அமிர்தம் நிறைந்து வழிந்தோடியது.
லத்தீஃப் தம்பதி நெஞ்சில் கைவைத்து சிரம் தாழ்த்தி நன்றி நவின்றனர் கண்களில் நீர் வழிந்தது ஞானி
தாமரை கண்களால் எல்லோரையும் ஆசிர்வதித்தார்.
அபயஹஸ்த்தம் காட்டி ஆசிர்வதித்த மகான் எழுந்தார் தண்டத்தை எடுத்துக் கொண்டார் பல்லக்கு அருகில் வர ஏறிக் கொண்டார் யானை ஒட்டகமெல்லாம் தொடர்ந்து வர பயணம் மீண்டும் திருநாட்டியத்தான்குடி நோக்கிப் புறப்பட்டது.
"ஜெய சங்கர ஹர ஹர சங்கர"
#periyava #truestory #kanchimahaperiyava
#jai mahaperiyava #periyava mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்

