#என்றும் mgr
1976.ஆம் ஆண்டு பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்
தேர்தல் பிரசாரம் செய்ய ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்த நேரம் அது. அவரைக் காண அவருடைய உண்மையான பக்தர் விசுவாசி, தொண்டர் வந்திருந்தார்..! பாதுகாப்பாளர் மூலம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவருக்கு .தெரிவித்தனர். அவரைஅழைத்து "என்ன விஷயம்?" என்று கேட்டார். வந்தவர் கையில் திருமண பத்திரிகை வைத்திருந்தார்.
எனது மகள் திருமணம், தாங்கள் தான் நடத்தி வைக்கவேண்டும்" என்றார். எப்போழுது எங்கே என்றும்.,
அவரை பற்றி நிலவரம் அறிகிறார். பத்திரிக்கை வாங்கி பார்க்கிறார்.
அந்த தேதியில் எனக்கு வேறு ஒரு நிகழ்ச்சி உள்ளது. அன்று என்னால் வரமுடியாது. வேறு ஒருவரை அனுப்புகிறேன்" என்று கூறி அனுப்பி வைத்தார்.
வீட்டுக்கு வந்த பக்தருக்கு மனம் அமைதியில்லை. நான் எந்தளவுக்கு அவர் மீது பக்தி வைத்திருந்தேன். அவருக்காகவே உயிர் வாழ்கிறேன் அப்படிப்பட்ட தலைவரே வராத திருமணம் நடத்தி என்ன பயன் என எண்ணி யாருக்கும் அழைப்பு கொடுக்காமல் தான் வைத்திருந்த திருமண அழைப்பிதழ் அனைத்தும் கிழித்து விட்டார்.
முதல் பத்திரிக்கை புரட்சித்தலைவருக்கு கொடுத்த பிறகுதான் மற்றவர்களுக்கு கொடுக்கவேண்டும் என
எண்ணியிருந்த பக்தருக்கு புரட்சித்தலைவரே வராத திருமணம் இனி நடத்தி பயன் என்ன. ?
அழைப்பிதழ் யாருக்கும் கொடுக்கவில்லை..உற்றார் உறவினர் யாரையும் திருமணத்துக்கு அழைக்கவில்லை, தோரணம் கட்டவில்லை, வாத்தியங்கள் முழங்க வில்லை, ஒலி பெருக்கி அமைக்க வில்லை. மாப்பிள்ளை வீட்டார் பொண்ணு வீட்டார் தவிர எவரையும் அழைக்கவில்லை. சாதாரண குடிசை வீட்டில் திருமண ஏற்பாடு நடந்தது.
திருமண நாள் அன்று அதிகாலை ஐந்து மணிக்கு தனது குடிசை வீட்டில் அருகே ஒரு கார் வந்து நின்றது. காரில் புரட்சித்தலைவர் வந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி ஆகினர். பக்தரால் ஒன்றும் பேசமுடியவில்லை. தன்னை தேடி தங்கதலைவர் வந்து இருக்கிறார். பக்தர்கள்தான் இறைவனை தேடி செல்வார்கள். இங்கே இறைவனே பக்தனை தேடி வருகின்றார். இது கனவா அல்லது நினைவா என்பது புரியாமல் உடம்பெல்லாம் சிலித்தது. என்ன செய்வது என்பது புரியாமல் தவித்தார்.
அதேசமயம் புரட்சித்தலைவர் வந்த செய்தி காட்டுதீ போல் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 20.30.கிராமங்கள் முழுவதும் பரவியது. புரட்சித்தலைவரைக் காண கூடிவிட்டனர். பொன்மனச்செம்மல் என்று பெயரில் மட்டும் அல்லாமல் அதை நிஜத்தில் நிரூபித்தார். தன்னுடன் வந்த பாதுகாப்பாளர் நால்வரை அழைத்து ஒவ்வொருரிடமும் ஒவ்வொரு தகவல் கூறி அனுப்பினார்.
அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் மேடை போடப்பட்டது. திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தன்னை காண வந்த மக்கள் அனைவருக்கும் சாப்பிட சுவையான உணவுகள் தயாரிக்கும் வேலை நடைபெற்றது. மணமேடையில் மணமக்களை அழைத்து திருமணம் சீரும் சிறப்பாக நடத்தினார். அதிகாலை ஐந்து மணிக்கு வந்து எட்டுமணி வரை இருந்து தனது வீட்டு திருமணம் போல் நடத்திக்காட்டினார்.
யாரையும் அழைக்காத திருமணம் அன்று ஊரே கூடி நடந்தது. அதற்குள் பத்திரிகையாளர்கள் கூடி விட்டனர். புரட்சித்தலைவரிடம் வந்து "நீங்கள் திருமணம் செய்து வைக்க வரமுடியாது என்று கூறியதும் இன்று வந்து திருமணம் நடத்தி வைக்க காரணம் என்ன?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு புரட்சித்தலைவர் கூறிய பதில் ??
என்மீது அதிகமான அன்பும் பாசமும் நம்பிக்கையும் வைத்திருப்பவர்கள் ஏழை மக்கள். அவர்களின் ஏழ்மையும் வறுமையும் நான் நன்றாக அறிவேன். நான் திருமணத்துக்கு வருகிறேன் என்று கூறினால் என்னை வரவேற்க தோரணம் கட்டுவார், கட்அவுட் கட்டுவார், மாலைகள் வாங்குவார்கள். ஊரில் உள்ள அனைவருக்கும் அழைப்பிதழ் தருவார், ஒலி ஒலி அமைப்புகள் அமைக்கப்படும். மேலும் என்னை வரவேற்க வேண்டும் என்று ஊரில் உள்ள அனைவருக்கும் அழைப்பிதழ் தருவார், போஸ்டர் ஒட்டுவார், விளம்பரம் செய்வார், என்னை வரவேற்க வேண்டும் என்று இரவு முழுவதும் தூங்காமல் விழித்துக்கொண்டிருப்பார்.
ஊரில் உள்ள அனைவரிடமும் கடன் வாங்கி திருமணம் செய்து வைப்பார்,.
நான் வருவேன், வாழ்த்திவிட்டு சென்று விடுவேன். நாளை கடனில் தத்தளிப்பது அவர்தான். என்னைஒரு முறை வரவேற்க அவர் பல நாள் கடன் காரனாக இருப்பார். அவர் சூழ்நிலை யாரும் யாராலும் அறிய முடியாது. அதனால்தான் நான் வரமாட்டேன் என்று கூறினேன்"
புரட்சித்தலைவர் பதில் கேட்டதும்
பல பேர் கண்களில் கண்ணீர் தன்னை அறியாமல் வந்தது. பத்திரிகையாளர்கள் வியந்து போனார்கள். புரட்சித்தலைவரை
மனதுக்குள் வாழ்த்தினார்கள். கூடியிருந்த மக்கள் அனைவரும் புரட்சித்தலைவரின் பொன்மனம் எண்ணி மகிழ்ந்தனர்.
வாழ்க! பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் புகழ்.
#MGR

