ShareChat
click to see wallet page
search
🏵️ஒரு நாள் ஒரு படித்த இளைஞன் ஒருவன் பகவான் தரிசனத்திற்கு வந்தான். 🏵️வந்தவன் சோபாவின் அருகே சென்று பகவானைப் பணிந்து விட்டு எதிரே உட்கார்ந்தான். 🏵️அவன் முகத்தைப் பார்த்தால் பகவானிடம் ஏதோ கேள்விகள் கேட்க வந்தவன் போல் தோன்றியது. 🏵️ஹாலில் அனைவரும் மௌனமாக உட்கார்ந்திருந்தார்கள். 🏵️அந்த மௌனத்தைக் கலைத்து எழுந்தது இளைஞனின் கேள்வி. 🏵️"சுவாமி, ராமகிருஷ்ண பரஹம்சர் விவேகானந்தரைத் தொட்ட மாத்திரத்தில் நிர்விகற்ப சமாதியில் நிலைப்பெறச் செய்தாரே! 🏵️அதுபோல் பகவானும் என்னை நிர்விகற்ப சமாதியில் நிலைபெறச் செய்ய முடியுமா? என்று கேட்டான். 🌻பகவான் பதிலேதும் கூறவில்லை. 🏵️இளைஞனோ தன் கேள்விக்கு விடையை ஆவலுடன் எதிர்நோக்கினான். 🌼சிறிது நேரத்திற்குப் பின் பகவான் அந்த இளைஞனைப் பார்த்து, "🌼#கேட்பது_விவேகானந்தர்_தானோ!" #என்றார். 🏵️அவ்வளவு தான் அவன் பதிலேதும் கூற முடியாமல் மௌனியானான். 🏵️தன் கேள்வியே தனக்குத் தோல்வியாக முடிந்ததை உணர்ந்து சிறிது நேரத்தில் எழுந்து போய்விட்டான். 🌻அந்த இளைஞன் எழுந்து வெளியே சென்ற பிறகு பகவான் அதைப்பற்றித் தொடர்ந்தார். "🌼யாருக்கும் தன் நிலையைப் பற்றிக் கவலையேயில்லை. 🌼தான் எல்லம் உணர்ந்த பூரணன் என்பதுதான் அவர்களின் முடிவு. 🌼காரணம், தன்னைப்பற்றிய விசாரத்தில் மனம் சொல்லாததேயாகும். 🌼மேலும், தன்னைப்பற்றி விசாரிப்பதற்குப் பதிலாக மனம் பிறரை ஆராயத் தொடங்குகிறது. 🌼இந்த ஆராய்ச்சி தான் சகல அனர்த்தங்களுக்கும் விபரீதங்களுக்கும் இடம் அளிக்கிறது. 🌼இந்தச் சாமியார் சோபாவில் உட்கார்ந்திருக்கிறாரே! 🌼இவரைச் சுற்றியும் நிறைய பேர் உட்கார்ந்து இருக்கிறார்களே! 🌼இவர் பெருமை தான் என்ன? 🌼நான் கேட்பதைச் செய்து காட்டுவாரா பார்க்கலாம்!" என்பதே அந்த இளைஞனின் நோக்கம். "🌼ஶ்ரீ ராமகிருஷ்ணரைப் போன்ற சாமர்த்தியம் என்னிடம் இருக்கிறதா என்பதை அறிய முற்பட்டானேயன்றி, கேட்கும் தான் விவேகானந்தரைப் போன்றவன்தானா என்பதைப் பற்றி சிந்திக்கவில்லை. 🌼ஏனென்றால், தன்னிடம் எல்லாத் தகுதியும் இருப்பதாக நினைப்பு. 🌼அதில் சந்தேகமிருந்தால் தானே அதைப்பற்றி விசாரணை எழும். 🌼தான் விவேகானந்தரைப் போன்றவன்தானா என்னும் விசாரமிருந்தால் இந்தக் கேள்விக்கே இடமில்லை. 🌼ஶ்ரீ ராமகிருஷ்ணர் விவேகானந்தர் ஒருவருக்குத்தான் அப்படிச் செய்தாரென்பதும் அவனுக்குத் தோன்றவில்லை. 🌼மனம் பிறரை ஆராய்வதை விட்டுத் தன்னை ஆராய முற்பட்டால் எந்தக் கேள்வியும் எழாது. 🌼எல்லாக் கேள்விகளுக்கும் சமாதானம் தனக்குள்ளேயே இருப்பதை அப்போது உணர்வான்" என்று கூறி முடித்தார். 🌺பகவான் அருளிய இந்த உபதேசம் அந்த இளைஞனுக்கு மட்டுமே அல்ல. 🌺அவன்தான் எழுந்து போய் விட்டானே! 🌺நம் ஒவ்வொருவருக்கும் தான். 🌺இந்த அரிய உபதேசம் அருளப்பட்டது. 🌺மனம் பிறரை ஆராயத் தலைப்படுவதைத் தடுக்க வேண்டுமானால்,தன்னை ஆராய்ந்து அடங்க வேண்டும். 🌺இதுதான் நமது ஶ்ரீரமண பகவானது தலையாய உபதேசமாகும். #ௐ_நமோ_பகவதே_ஶ்ரீரமணாய.🙏🙏🙏 #ஶ்ரீரமணார்ப்பணம்🙇🙇🙇 🚩🕉🪷🙏🏻 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #மண்ணில் வாழ்ந்த மகான்கள் #🙏ஆன்மீகம்
பகவான் ரமணர் - ShareChat