4🌹தை பூசம் ஸ்பெஷல்: 7
🌹வள்ளலார் - பகுதி 4
**************************
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
🌹வள்ளலார் கொள்கைகள்:
**********************************
1. கடவுள் ஒருவரே: அவரே அருட்பெருஞ ஜோதி ஆண்டவர்
2. எல்லா உயிர்களும் தம் உயிர் போல் எண்ண வேண்டும்
3. ஜீவகாருண்யம்தான் மோட்ச வீட்டின் திறவு கோல்
4. சாதி சமய பேதங்கள் கடந்து ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஒருமை உணர்வா ளராக இருக்க வழசெய்ய வேண்டும்.
5. கண் மூடி வழக்கெல்லாம் மண்மூடி போக வேண்டும்
6. தானம் தவம் இரண்டும் இரு கண்கள்: அதன் நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்மு;.
7. புலால் மறுப்பு உயிர் ஓம்புதல் பசித்தவர்க ளுக்கு பசி தவித்தல் புரிய வேண்டும்.
8. கடவுள் பெயரால் பலியிடுதல் கூடாது.
9. சிறு தெய்வ வழிபாடு கூடாது.
10. கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்க வேண்டாம்.
11. மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்ய வேண்டாம்.
12. இறந்தவர்களை புதைக்க வேண்டும் எரிக்க கூடாது.
13. கருமாதி திதி முதலிய சடங்குகள் செய்ய வேண்டார்.
14. எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
🌹வள்ளலார் அருளிச் செய்தவைகள்:
*********************************************
தேனினும் இனிய திருவருட்பா பாடல்கள் 5818 பாடல்களை நமக்காக பெருமான் அருளி யுள்ளார். இந்த பாடல்கள் ஆறு திருமுறைக ளா க தொகுக்கப்பட்டுள்ளது. இவற்றில் முத்தாய்ப் பானது அருட்பெருஞ்ஜோதி அகவல்.
18-04-1872 தமிழ் ஆங்கில வருடம் சித்திரை மாதம் 8ந் தேதி ஒரே இரவில் கடுக்காய் மை கொண்டு 15696 வரிகள் உள்ள அருட்பெருஞ் ஜோதி அகவல் எழுதியுள்ளார்.
பாடல்களாக அல்லாமல் உரைநடையாகவும் பெருமான் அருளியுள்ளார்.
🌹அவைகள்:
****************
🚩உரை நடை நூல்கள்
1. மனுமுறை கண்ட வாசகம்
2. ஜீவ காருண்ய ஒழுக்கம்
2. வியாக்கியானங்கள்
3. மருத்துவக் குறிப்புகள்
4. உபதேசங்கள்
5. திருமுகங்கள் (கடிதங்கள்)
6. அழைப்பிதழ்கள் அறிவிப்புகள் கட்டளைகள்
7. விண்ணப்பங்கள்
மேற்கண்டவைகள் மூலம் வள்ளலார் மனிதன் மாமனித நிலை அடைய வேண்டிய பல்வேறு உபதேசங்களை நம் மேல் உள்ள இரக்கத்தின் காரணமாக நமக்கு அருளிச் செய்துள்ளார்.
🌹வள்ளலார் ஒரு பன்முக படைப்பாளி:
**********************************************
1. நூலாசிரியர்
2. உரையாசிரியர்
3. பதிப்பு ஆசிரியர்
4. பத்திரிகை ஆசிரியர்
5. போதகாசிரியர்
6. ஞானாசிரியர்
7. சித்த மருத்துவர்
8. வியாக்கியான கர்த்தர்
9. அருள் கவிஞர்
10. அருள் ஞானி
வள்ளலார் மணி-மந்திரம்-மருந்து இந்த மூன்றிலும் கை தேர்ந்தவர்.
🌹மணி (தியானம்):
************************
பெருமான் புருவ மத்தி தியானம் பற்றி சதா புருவ மத்தியில் நினைப்பு கொள்ளச் சொல்வார்.
🌹தானம் தவம் இரண்டும் இரு கண்கள்.
***********************************************
தானம் செய்ய தருமச் சாலையைக் கண்ட பெருமான். தவம் செய்வதற்கு சித்தி வளாகத் தை தேர்வு செய்தார். பெருமான் இரண்டு கரி அடுப்புடன் கூடிய இரும்பு நெருப்பு சட்டிகளு க்கு நடுவே உட்கார்ந்து தவம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தான். அந்த அளவு வெப்பம் பெருமான் உடம்பில் இருந்தது. தியானம் உண்டானால் பொசிப்பு மாறும்.
பெருமான் தியானத்தை கைக் கொண்டதால் உணவு குறைந்தது. தூக்கம் குறைந்தது. உடம்பு ஒளித் தேகம் பெற முடிந்தது.
இந்த தவ ஆற்றலால் தான் பெருமான் உடல் பிணமாக விழவில்லை. மண்ணுக்கோ நெருப்புக்கோ இரையாகவில்லை. தகனம் இல்லை. சமாதி இல்லை. அருள் உடம்பாக மாற்றிக் கொள்ள தவம் உதவியது.
🌹மந்திரம்:
**************
மந்திரம் பற்றி பட்டினத்தார் சொல்லும்போது ‘ஏற்றிக் கிடக்கும் ஏழு கோடி மந்திரம்’ என மந்திரத்தின் வகையைச் சொல்லுவார்.
திருமூலர் தம் பாடல்களின் தொகுப்புக்கு திரு மந்திரம் என்றே பெயர் இட்டுள்ளார். மந்திரமா வது நீறு என்று அப்பர் சாமிகள் சொல்வார்.
எழுத்துக்களின் பெரிய சக்திகள் அடங்கி உள்ளன. அந்த எழுத்துக்களை வரிசையாக உருப்போட்டால் அதன் மூலம் நினைப்பதை பெறலாம் என்பார்கள்.
* சிதம்பரச் சக்கரம்
* ஸ்ரீசக்கரம்
* அறுகோணச் சக்கரம்
* ஸ்வஸ்திக் சக்கரம்
* சுதர்சன் சக்கரம்
* மகாமேரு சக்கரம்
என பல சக்கரங்கள் உண்டு. அந்தச் சக்கரங்க ளில் அந்தந்ததேவதைக்குரிய எழுத்துக்களை அமைத்து அதற்குரிய பூஜைகளைப் போட்டு அதற்குரிய நேரங்களில் அந்த எழுத்துக்களை உச்சரித்தால் அந்தந்த தேவதைகள் நம் முன் நிற்கும். அது நாம் இட்ட செயலைச் செய்யும். இது பொதுவாக நாம் அறிந்த செய்தி. இங்கே நாம் சில மந்திர எழுத்துக்களைப் பார்ப்போம்.
சி-சி என்பது ஓர் எழுத்து. இது சிகரம் என்பது
சிவ-என்பது இரண்டு எழுத்து. இதன் பொருள் அனாதியாய் வல்லமையுடையது.
சிவம் - மூன்று எழுத்து. சி-சிகரம் - சத்து,
வ-வகரம் - சித்து ம-மகரம்-ஆனந்தம்.
சத்து சித்து ஆனந்தம்.
நாராயணா - நான்கு எழுத்து.
சிவாய நம - ஐந்தெழுத்து
சரவணபவ - ஆறு எழுத்து.
வள்ளலார் மந்திரங்களைப் பற்றி அகவலில் சொல்லுவார். ‘ஐந்தென எட்டென ஆறென நான்கென முந்துறுமறை முறைமொழியும் மந்திரமே’ என்பார்.
இப்படிச் சொன்னவர் பேருபதேசம் செய்து சொல்லியது.
‘இத்தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி சாதக சகாயமான திருவருள் மகா வாக்கியத் திருமந்திரத்தை தமது உண்மை யை வெளிப்படக் காட்டும் மகா மந்திர வாக்கி யத்தை எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம் நீங்க் எல்லோரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமை யைப் பற்றிக் குறிப்பித்தேன். நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில் நமக்கு முன் சாதனம் கருணை ஆனதினாலே ஆண்டவர் முற்சாதனமாக
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு கருணை அருள் என்பவை ஒரு பொருளையேக் குறிக்கும். ஆதலால் பெரிய அறிவுடைய தயவே பூரணமா ம் என அருட்பெருஞ்ஹோதி மகா மந்திர சிறப்பை கூறுகிறார்.
🌹மருந்து:
************
மனிதனுக்கு நோய் இரண்டு வகையில் ஏற்படுகிறது.
கொலை கொள்ளை களவு கற்பழிப்பு ஏமாற்ற ல் வஞ்சித்தல் இவைகளால் வினை உருவாகி அதனால் நோய் ஏற்படுகிறது.
இரண்டாவது வகை நோய் ஏற்படக் காரணம் முறையற்ற இன்பம் துய்ப்பு முறையற்ற உணவுகளால் வருபவை.
இவைகளை குணப்படுத்த வள்ளலார் நமக்கு 485 வகை மூலிகைகள் மற்றும் அதன் குண அட்டவணையைத் தந்துள்ளார்.
🌹ஞான மூலிகைகள்
**************************
என 5 மூலிகைகளைகூறுகிறார்.
1. கரிசலாங்கண்ணி
2. தூதுவளை
3. முசுமுசுக்கை
4. பொன்னாங்கண்ணி
5. வல்லாரை
இவையல்லாமல்
🌹5 சஞ்சீவி மூலிகைகளை
*********************************
சொல்லியுள்ளார்.
தினசரி காலையில் கீழ்க்கண்ட மூலிகைகளி ல் ஏதாகிலும் ஒன்றை பயன்படுத்தும்படி கூறுகிறார். அவை:
1. வில்வம்
2. சீந்தில்
3. பொற்றலைக் கையாந்தக்கரை
4. புளியாரை
5. நன்னாரி
6. கடுக்காய்
7. மிளகு
8. அறுகம் வேர்
இவைகள் எல்லாம் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களில் இருந்து நோய் நீக்கி இந்த தேகம் நீண்டு வாழ நம் மேல் உள்ள பெருங்கருணை யினால் வள்ளலார் நமக்கு கூறியுள்ளார் இந்த மேற்கண்ட மருந்துகள் எல்லாம் நம்மை சுற்றியே உள்ளன.இதற்காக தேடிக் கொண்டு செல்ல வேண்டாம். பயன்படுத்தி பயன் அடையலாம்.
🌹வள்ளலார் உபதேசங்கள்:
**********************************
1. நித்தியக் கரும பொதுவிதி
2. நித்தியக் கரும சிறப்புவிதி
உபதேசங்கள் பேருபதேசங்கள் என இரு வகை ப்படும்.
🌹நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்:
*******************************************************
1. இந்திரிய ஒழுக்கம்
2. கரண ஒழுக்கம்
3. ஜீவ ஒழுக்கம்
4. ஆன்ம ஒழுக்கம்
🌹நாம் பெறும் புருஷார்த்தங்கள்:
****************************************
* ஏமசித்தி
* சாகாக்கல்வி
* தத்துவ நிக்கிரகம் செய்தல்
* கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்
🌹நம்மை நஷ்டம் செய்யும் நான்கு:
******************************************
* ஆகாரம்
* மைதுனம் (உடல் உறவு)
* நித்திரை
* பயம்
🌹துர் மரணம் ஏன் ஏற்படுகிறது?
***************************************
அருந்துதல் - அதிப்படியான உணவு
பொருந்துதல் - அதிகப்படியான உடல் உறவு
🌹சன்மார்க்க ஆகாரம்:
****************************
* கரிசலாங்கண்ணி
* வாழை
* தென்னை
இவைகள் மேல் பெய்கின்ற பனிச்சலம் மழை சலம் இவைகள் தான் சுத்த சலம் அல்லது அமுதம்.
தேன் சர்க்கரை கற்கண்டு வெல்லம் இவைக ளை ஆகாரத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
உப்பு: நம் தேகத்தை நலஞ்செய்வது உப்பு. உப்பைக் கட்டி ஆகாரத்தில் சேர்க்க வேண்டும்.
சர்க்கரை: எந்தக் காலத்திலும் புழுக்காத ஆகாரம். மற்ற வஸ்த்துகள் புழுக்கும்.
சாதம் வடித்து சாப்பிட வேண்டும். பொங்கி சாப்பிடக் கூடாது.
எப்போதும் வெந்நீர் பயன்படுத்த வேண்டும். (குளிக்க குடிக்க)
🌹நீக்க வேண்டிய உணவு வகைகள்.
********************************************
* பழங்கறி
* எருமைப்பால்
* பாகற்காய்
* புளி
* புகையிலை
* மதுவகைகள்
* புலால்
கிழங்கு வகைகள் உண்ண வேண்டாம். கரு ணை கிழங்கு மாத்திரம் உண்ணலாம். பழவ கைகளில் ரஸ்தாளி பேயன் வாழைப் பழம் உண்ணலாம். வெற்றிலைப் பாக்கு தாம்பூலம் தரித்தல் நல்லது. பகல் தூக்கம் கூடாது.
🌹சேர்க்க வேண்டிய காய்கள்:
*************************************
* கத்தரிக்காய்
* வாழைக்காய்
* அவரைக்காய்
* முருங்கைக்காய்
* பீர்க்கங்காய்
* கல்யாணப் பூசணிக்காய்
* தூதுளங்காய்
* புடலங்காய்
தாளிப்பில் பசுவெண்ணெய் பயன்படுத்தலா ம் கடுகு தாளிக்க பயன்படுத்த வேண்டாம். சீரகம் பயன்படுத்தலாம். இந்த தேகம் நீடிப்ப தற்கு வள்ளலார் சொன்ன மூலிகைகள் கீரை கள் காய்கறிகள் பழங்களை பயன்படுத்தி நீண்ட நாள் நோய் இன்றி வாழ வள்ளலார் நம் மேல் உள்ள கருணையினால் நமக்கு மேற்குறித்த வைகளை சொல்லியுள்ளார்.
மனிதன் மரணமிலாப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்றால் மேலே சொல்லப்பட்ட அத்தனை செய்கைகளையும் கடைபிடித்தால் மரணமிலாப் பெருவாழ்வு வாழலாம்.
இவற்றில் சிலவகைகளை கடைபிடித்தாலே நாம் மாமனிதராக வாழலாம். மரணமிலாப் பெருவாழ்வு என்பது சாகாமல் இருப்பது இல்லை. வாழக் கூடிய நாட்களிலவ் ஆயுளை நீடித்து நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களுக் கும் இன்பம் விளைவிக்க வேண்டும்.
உலகினில் உயிர்களுக்கு ஏற்படும் துன்பங்க ளை நிவர்த்தி செய்வதற்கு நமக்கு வாய்ப்பு இருக்குமானால் அவர்கள் துன்பங்களை நீக்கி இன்பம் வரச் செய்வது தான் ஜீவ காரு ண்யம். இதற்காகத் தான் தருமச்சாலை நிறுவி பசித்த வர்கள் துன்பம் போக்கினார்.
வள்ளலார் ஒரு வெள்ளாடைதுறவி. துறவியா ன வள்ளலார் பசித்த அனைவருக்கும் சத்திய தருமச் சாலை நிறுவி அன்னதானம் செய்தார் அவர் மூட்டிய அடுப்பு அணையாமல் 152 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. சத்திய ஞான சபையில் வள்ளலார் ஆரம்பித் த ஜோதி தரிச னம் 148 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது
சித்தி வளாகம் மேட்டுக் குப்பத்தில் வள்ளலா ரால் ஏற்றப்பட்ட ஒளி விளக்கு தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டு வருகிறது. சங்கம் செயல்பட்டு வருகிறது. ஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது.
நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன். எனக்கு ள் தனித்து என்றார் வள்ளலார். அவர் சொன்ன படி இன்றளவும் எல்லாம் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த அத்துணை அருள் செய்கை எல்லாம் வள்ளல் பெருமானே நடத்துக்கின்றார்.
🚩‘எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க’.
இந்த ஒரு வரி தான் நமக்கு பொது வழிபாடு. உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம்விலக நீ அடைந்து விலக்குக. மகிழ்க. சுத்த சன்மார்க்க சுக நிலைப் பெறுக. உத்தமன் ஆகுக. ஓங்குக என்றனை என்பார் வள்ளலார். நாம் எல்லோரும் உத்தமர்களாக ஓங்கி வாழ அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள்புரிவராக.
'‘எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க’'.
🌹திருச்சிற்றம்பலம்.
🌹நன்றி... வாழ்க வளமுடன்..
🌹28.01.2026... நேசமுடன் விஜயராகவன்... #🕉️ஓம் முருகா #🤔 ஆன்மீக சிந்தனைகள் #லதாநடராஜன் பக்தி படம் & ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் #✡️ராசிபலன் #LathaNataraj Edit'Z


