ShareChat
click to see wallet page
search
அருணாசலத்தைப்பற்றி அதிற் கூறியிருந்ததைப்பற்றி பின்வருமாறு பகவான், சிவ புராணத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில் சுருங்கக் கூறியருளினார்: சிவபெருமான் நிஷ்கலம், இரண்டுமாவான். அனைத்திற்கும் அதீதமான நிர்க்குண ஸ்வரூபமே நிஷ்கலமென்றும் அனைத்தின் அந்தர்யாமியா இருக்கும் பான்மையே ஸகலமென்றும் சொல்லப்படும். ஆதியில் அருணாசல வடிவிற் தோன்றியது லிங்கம் இன்றும் விளங்கிக் கொண்டுள்ளது. இவ்வருணாசல லிங்கம் முதன் முதற் தோன்றியது மார்கழி மாத ஆருத்ரா (திருவாதிரை) நக்ஷத்ர நன்னாளில்; அதனை அதில தேவர்களும் முதன் முதல் வழிபட்டேத்தியது மாசி சிவராத்திரியின் போது. சிவராத்திரியின் மஹத்துவம் இதனால் விளக்கமாம். பிரணவம் சிவனது நிஷ்கல ஸ்வரூபத்தையும் பஞ்சாக்ஷ மஹாமந்த்ரம் பஞ்சகிருத்யங்களையும் செய்தருளும் அவனது பாவன ஸகல ஸ்வரூபத்தையும் குறிப்பவனாம் பகவானுக்குத் தொண்டு புரிந்து வந்த பழவடியா ரொருவர் (பகவானால் அருளப்பெற்ற) 'அருணாசல பஞ்சரத்ன'த்தின் இரண்டாவது பா வின் பொருளைப்பற்றி வினவினார். பகவான் அதைப் பின்வருமாறு விளக்கியருளினார். ப: உலகம் திரைமீது இலகும் சித்திரம் போன்றது. அத்திரையே அருணாசலம். எதனின்றும் இவ்வுலகாம் சித்திரம் தோன்றுகிறதோ, எதனில் அது மறைகிறதோ, அதற்கன்னியமாம் இருப்பேதும் இச்சித்திரத்திற் கில்லை. உலகின் உண்மை எதுவென்று பார்த்தால் அது அருணாசலமாய் முடிகிறது. அதாவது, இவ்வுலகைக் காண்பவன் யாரென்று உள்ளே நாடினால், அனைத்தையும் காண்பவன் 'நான்' ஒருவனே என்ற முடிவுக்கு வருவோம். அந்த 'நான்' எங்கிருந்து உதிக்கின்றதென்று ஒருமுகமாய் கூர்ந்து கவனித்தால், அவ்வகந்தை 'நான்' மறைந்து, அவ்விடத்தே அகண்டமாய் நான் நானென்று ஒன்று தானே யொளிர்கிறது. இத்தகையதென்று அதைப்பற்றி ஏதும் சொல்லவே முடியாது; தாகார அனுபவமாம் அதை விஷயீகரிக்க முடியாது. ஆனந்த அதுவே அனைத்துயிரின் மையம். ஆதலால் அது வழங்கப்பெறும். அந்தர்முகப்பட்டு அதை உணர்வதே ஒருவனே சிவஞானப் பெருங்கடலாவான்) - ஆன்றோர் வாக்கு நமோ ரமணா 🚩🕉🪷🙏🏻 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #சித்தர்கள் வாக்கு #மண்ணில் வாழ்ந்த மகான்கள்
பகவான் ரமணர் - ShareChat