ShareChat
click to see wallet page
search
சிவவாக்கியம்🙏 பாடல் எண்: 107 பச்சைமண் பதுப்பிலே பழுப்பதிந்த வேட்டுவன் நித்தமும் நினைந்திட நினைத்தவண்ண மாயிடும் பச்சைமண் ணிடிந்துபோய் பறந்ததும்பி யாயிடும் பித்தர்கா ளறிந்துகொள் பிரானிருந்த கோலமே. -சிவவாக்கியர் விளக்கம்: தும்பியான குளவியானது ஈரமான மண்ணைக் கொண்டு அழகிய கூடுகட்டி உணர்வுள்ள புழுவை வேட்டையாடி கொண்டு வந்து அடைக்கும். பின் எந்நேரமும் தன்னைப் போல் மாற்றுவதற்கு ரீங்கார ஓசையுடன் கொட்டிக்கொண்டே இருக்கும். இப்படி ஒரே நினைவோடு செய்யும் அதன் செயலால் அப்புழுவானது குளவி நினைத்தவாறே குளவியாக மாறிவிடும். அற்ப உயிராக இருந்த புழு குளவியாகி அக்கூட்டை உடைத்துக்கொண்டு தும்பியாக பறந்து செல்லும். இதனை அறிந்து கொண்டு ஒரே நினைவோடு பிராணனை இறைவனோடு இணைக்க தியானம் செய்யுங்கள். ஈசன் நடத்தும் நாடகமே எல்லாம் என்பதை உணருங்கள். 🙏சிவ சிவ #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - ShareChat