ShareChat
click to see wallet page
search
#🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #💫விஷ்ணு புராணக் கதைகள்🙏🏻 #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 . *உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி கடை திறவாய் வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்* . மத யானையைப் போன்றவனும், புறமுதுகே காட்டாத தோள் வலிமை உடையனுமான நந்தகோபாலனின் மருமகளே, நப்பின்னையே. நறுமணம் வீசும் கூந்தலை உடைய குழலியே தாழ் திறவாய். கோழிகள் எல்லாம் கூவத் தொடங்கி விட்டன. குயில் இனங்கள் கூவத் தொடங்கி விட்டன. அதை வந்து பார். உனது செந்தாமரைக் கையில் குலுங்கும் வளையல்கள் ஒலியெழுப்ப வெளியே வந்து உன் கணவனாகிய கண்ணனின் புகழ் பாட மகிழ்ச்சியோடு கதவைத் திறந்து வெளியே வருவாயாக.
🙏🏻ஆண்டாள் பாடல்கள் - dheena_tn0z | 0000 మమ uona0 சோததம ف  60 dheena_tn0z | 0000 మమ uona0 சோததம ف  60 - ShareChat