அத்வைதம் உலகத்தை துறப்பது அவசியம் என்கிறது; சைவம் இல்லறமே சிறந்த அறம் என்கிறது; இவை இரண்டிற்கும் இடையே உள்ள ஆன்மீகம் ஒன்று இருக்கிறது - அது தான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகம். நான் பல நாட்கள் ராமகிருஷ்ண மடத்தில் ஆராத்ரிகம் பங்கேற்று, அமுத மொழிகள் படித்து கற்றுக் கொண்டது. இது பலருக்கும் தெரியாத ஆன்மீகம் - ஏனென்றால் நான் கண்ட ஸ்ரீராமகிருஷ்ணர் ராமகிருஷ்ண மடத்திலும் இல்லை!! அவருக்கு தன்னை கடவுள்; அவதாரம் என்றெல்லாம் அழைத்தால் பிடிக்காது. நான் என்றைக்கும் இறைவனின் சேவகனாக இருப்பதையே விரும்புகிறேன் என்பார்!! அதனாலோ என்னவோ அவரை பெருமாள் அவதாரம் என்று கூறுவோர் உண்டு!! 😄 **************************************************** ஒரு முறை ஸ்ரீராமகிருஷ்ணர் பக்தர்களுடன் பக்தி பாடல்கள் எல்லாம் பாடிக் கொண்டிருந்த போது, ஒரு சாதகர் ராமபிரசாதர் பாடல் ஒன்றை பாடினார். ராமபிரசாதரின் பாடல்கள் எல்லாம் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு மிகவும் பிடிக்கும் . ஆகையால், அவர் அந்த பாடலை பாடினார் - "இந்த உலகமே வெறும் மாயை, இது வெறும் கனவு போன்றது; இது துன்பங்கள் நிறைந்தது..." . இப்படி பாடினால் அவருக்கு பிடிக்கும் என்று நினைத்தார் போலும்!! ஆனால், ஸ்ரீராமகிருஷ்ணர் அவரை தடுத்து பிறகு கூறினார்: "எதற்காக உலகம் மாயை, கனவு, பாழும் கிணறு என்றெல்லாம் பாட வேண்டும்?! இவையெல்லாம் இறைவனை காணாதவன் தான் பாடுவான்!! இறைவனை கண்டவன் நிலை தெரியுமா?! அவன் இப்படி பாடுவான் - "இந்த உலகம் எனக்கு ஒரு இன்ப மாளிகை!! நான் இந்த வாழ்க்கையை இன்பமாக கழிப்பேன்!!" என்றாரே பார்க்கலாம்!! அதற்கு உதாரணமாக ஜனக மன்னரை உதாரணமாகவும் கூறினார். ஜனகர் கர்ம யோகம், ஞான யோகம் என்று இரண்டு கைகளிலும் இரண்டு வாள்களை வைத்துக் கொண்டு உலகில் வாழ்ந்தார்!! ஆகையால் அது போல் வாழலாம் என்பதற்கு ஜனக மகாராஜாவே எடுத்துக்காட்டு என்று போதனை செய்தார்!! உண்மையில் ஸ்ரீராமகிருஷ்ணர் பல முறை வலியுறுத்திய கொள்கை இது. "முதலில் இறைவனை அடைய முயற்சி செய். அது வரை துறக்க வேண்டிய அனைத்தையும் துற. இறைவனை அடைந்து விட்டால் பிறகு கவலை ஏதும் இல்லை!! நமக்கு ஒரு குறையும் வராது!!" என்பது அவர் அறிவுரை. இதற்கும் சைவ சித்தாந்த கொள்கைக்கும் என்ன வேறுபாடு?! நாம் இறைவனை காணாத போதே இந்த மாதிரி பாடுவது தான் வேறுபாடு!! 😄😄😂 நான் முன்பு எழுதிய "உலகை துறக்க வேண்டுமா?! சரி; எதை துறக்க வேண்டும் என்று தான் தெரியவில்லை!! எதுவும் எமக்கு இறைவனை அடைய தடையில்லை" என்றது உண்மை தான்!! ஆனால், இறைவனை காணாத போது கூட "உலகம் எனக்கு இன்ப மாளிகை" என்று வாழ்வது தான் தவறு!! அத்தகைய நிலையில் ராம்பிரசாத் பாடிய பாடல் தான் சரி!! உங்களுக்கு எப்படி?! 😄😂 ************************************************** அப்போதும் கூட தமிழ் கலாச்சாரம் உலகை துறக்க வேண்டும் என்று சொல்லாது; வாழ்க்கையை காம கூத்தில் அழித்துக் கொள்ளாமல் உபயோகமாக பிறருக்கு அர்ப்பணித்து, நன்மை செய்து அழிந்து போ!! அடுத்த பிறவியில் இறைவனை காணும் வழி கிடைக்கும் என்று தான் கூறும்!! எது பிறருக்கு நன்மை என்று தெரிவதற்கு கூட சிறிது கடவுள் அருள் வேண்டும் என்பதும் ஸ்ரீராமகிருஷ்ணர் வாக்கு!! ************************************************* #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம


