ShareChat
click to see wallet page
search
#🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏ஏகாதசி🕉️ . *குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய் மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண் எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால் தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்* . மங்களகரமாக குத்து விளக்கு ஒளிவீச, தந்தத்தினால் செய்யப்பட்ட கால்களைக் கொண்ட கட்டிலின் மேல் விரிக்கப்பட்ட மென்மையான பஞ்சுமெத்தையின் மேல் கொத்துக் கொத்தாக தலையில் மலர்களை அணிந்த நப்பின்னையோடு படுத்திருக்கும் மலர்ந்த மார்பை உடைய கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக. அவன் வார்த்தை சொல்லத் தொடங்கியதும் நப்பின்னை அவன் வாயை மூடிவிட்டாள். இந்த நிகழ்ச்சியை கோபியர்கள் சாளரத்தின் வழியாகக் கண்டார்கள். மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா?
🙏🏻ஆண்டாள் பாடல்கள் - Gheela t07 Gn ~d-? - 7 Gheela t07 Gn ~d-? - 7 - ShareChat