#🙏நமது கலாச்சாரம் #📝என் இதய உணர்வுகள் #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #💞Feel My Love💖
அன்னை போலவே அன்பும் பொழிய
தன்னில் காதலும் தானாய் வளரவே
ஆண்டவன் நம்மை அனுதினமும்
காக்க
பண்பில் சிறந்து பாவையே
வருகவே
இல்லறம் இனிக்க இனிமை கூடிட
நல்லறம் சிந்தையில் நாளும் மலரவே
ஈகை போற்றும் ஈர்ப்பு விசையும்
ஆசையும் விருப்பமும் அணுவில் கலக்குமே
உடலும் இங்கே உலகில் தவிக்க
மடலும் சிவந்து மயக்கம் கொடுக்குமே
ஊடலும் நித்தம் உள்ளத்தில் எழுந்திட
கூடலும் நிகழும் குதூகலம் பிறக்கவே
எண்ணம் பகிர்ந்து ஏக்கமும் ஊற்றிட
வண்ணம் பெற்று வரமாய் அமையவே
ஐம்பூதங்கள் கலவை ஐக்கியம் கொள்ள
ஐம்புலன் நிறைந்து ஐயமோ அகலவே
ஏற்றம் பெறவாழ்வில் ஏணியும் நீயே
காற்றே நம்முள் கருவாய் திகழுமே
ஒழுக்கம் பழக்கம் ஒளிரும் வாழ்வும்
ஓம்மெனச் சொல்லில் ஓங்கி தழைக்குமே
ஔவை சொற்கள் ஔகாரம் மிளிர
ஔவை மொழியில் மௌனம் கொள்கவே
சத்தியம் பறையும் சகலமும் சிவமே
வித்துகள் மாற்றம் விரைவில் நிச்சயமே
அஃது பதித்த அகத்தில் கேடயம்
எஃகு மனமும் இறுதிவரை இருக்குமே
✍️ஆதி தமிழன்


