சிவமணியம்
கேள்வி: அதை எப்படி செய்யறது?
பகவான்: நமக்கு மனசு
இருக்குன்னு எப்படித் தெரியறது? அதோட செயல்களாலே. அதாவது நினைப்புகளாலே. எப்பெல்லாம் நினைப்பு வருதோ... அப்போல்லாம் நினைப்பு பெருமாளோடதுன்னு மறக்காம இரும்! பெருமாளை விட்டு நினைப்பு தனியா இருக்காது. இதுதான் மனசை ஒப்படைக்கறது ஓய். ஏதாவது இங்கே பெருமாளை விட்டு இருக்குமா?
எல்லாம் பெருமாள்தான். எல்லார் மூலமாவும் செயல் படறார். நாம ஏன் கவலைப்படணும் ஓய்?
கேள்வி: காலம்ன்னா என்ன?
பகவான்: ஒரு நிலைக்குள்ளே,
நம்மளாலே அறியப்பட்டு,
மாற்றங்களுக்கு ஆளாவதே காலம்.
இரண்டு நிகழ்ச்சிகளுக்கு, இடையிலே இருக்கற இடைவெளிதான் காலம்.
மனம் இல்லேன்னா நிலை ஏற்படாது. மனம் ஆத்மாவிலே இருந்து வர்றது.
தேசம் காலம் இரண்டும் மனசோட கற்பனை.
ஆனா நம்மளோட சொரூபம் மனம் கடந்தது. அதனாலே காலத்தைப் பற்றிய கேள்வியே.. நாம ஸ்வபாவத்திலே இருந்தா
ஏற்படாது.
கேள்வி: பகவான் சொல்றது, கேக்கறதுக்கு அவ்வளவு சந்தோசமாயிருக்கு. ஆனா அதோட பொருள் எங்களோட
அறிவுக்கு அப்பாற்பட்டு இருக்கு. ஞானமடைய நினைக்கறதுக்கு கூட, ரொம்பத் தூரம் நானெல்லாம் போகணும்.
அப்பொழுது இன்னொருத்தர்.
கேள்வி: எங்களுக்கு புரியறது எல்லாம புத்தியிலதான். ஏதாவது பகவான் அப்பியாசம் சொன்னா... எங்களுக்கு ரொம்ப உதவியாயிருக்கும்.
பகவான்: உண்மையைத் தேடறவா, எதையாவது, அதைச் செய்... இதைச் செய்ன்னு சொல்றவன், உண்மையான குரு கிடையாது. அவாளே அதையும், இதையும் செஞ்சு, இளைச்சுப் போய்தான் வந்துருக்கா.
அவாளுக்குத் தேவையெல்லாம் அமைதியும், சுகமும்தான். அவாளே எல்லாம் ஓயணுங்கறா. அவாளைச் சும்மாயிருன்னு சொல்லி சுகப்படுத்தாமே... எதையாவது செய்யச் சொன்னா, அவன் குரு இல்லை. கொலைகாரனோ, பிரம்மனோ, யமனோதான் அவன் ரூபத்திலே வந்திருக்கான். அவன் சாதகாளை விடுவிக்க மாட்டான். மாட்டித்தான் விடுவான்.
கேள்வி: நாங்க சும்மாயிருக்கணும்னு நினைச்சா, அதுவே பெரிய வேலையாயிடுது. சும்மாயிருக்க முடியலை.
பகவான்: உண்மைதான். குரங்கை நினைக்காமே மருந்தைக் குடின்னா... மருந்தைக் குடிக்க முடியுமா? அப்படித்தான் சும்மாயிருக்கறதும். சும்மாயிருக்கணும்ன்னு நினைச்சாலே போச்சு... நினைப்பு வந்துடும்.
கேள்வி: அப்போ எப்படிதான் சும்மாயிருக்கறது?
பகவான்: சும்மாயிருந்து எதையோ அடையப் போறாம்ன்னு நினைக்கறேள்.
என்ன இருக்கு இங்கே அடையறதுக்கு!
அடையணும்னா ஏற்கனவே
அடையலேன்னுதான்
அர்த்தம்.
நாம இருக்கறதேதான் 'அது'
கேள்வி: அப்போ ஏன் எங்களுக்குத் தெரிய மாட்டேங்குது?
அப்பொழுது அண்ணாமலைசுவாமி.
கேள்வி: நான் ஆத்மாங்கறதை மறக்காம இருக்க எப்பவும் முயற்சி பண்றேன்.
பகவான்: ஏன் ஒருத்தன் நான் ஆத்மான்னு நினைக்கணும்?
அவன் அதுவேதான்.
நான் மனுஷன்... நான்
மனுஷன்னு ஒருத்தன்
நினைக்கறானா?
கேள்வி: நா மனுஷன்கறது நல்லா ஆழமாயிருக்கு! அதனால தேவையில்லை!
பகவான்: ஒருத்தன் ஏன் தன்னை 'நான் மனுஷன்னு' நினைக்கணும். அதுக்கு மாறான 'நான் மிருகம்' ன்னு நினைப்பு வந்தாத்தான்... 'இல்லே... நான் மனுஷன்'ன்னு நினைக்கணும்.
அதே மாதிரி 'நான் அது' ங்கற நினைப்பு... 'நான் மனுஷன்'கற நினைப்பு இருக்கற வரைக்கும்தான்.
கேள்வி: நான் மனுஷன்கற நினைப்பு திடமாயிருக்கு. போக்க முடியலை.
பகவான்: நீ இருக்கறதா இரு! ஏன் மனுஷன்னு நினைக்கறே!
கேள்வி: நான் மனுஷன்கற நினைப்பு இயல்பா இருக்கு.
பகவான்: இல்லே. நான் இருக்கேங்கறதுதான் ஸ்வபாவமா இருக்கு.
அதை ஏன் மனுஷன்ல சேக்கறே!
கேள்வி: நான் மனுஷன்கறது தெளிவாயிருக்கு. 'நான் அது'ங்கறது புத்திபூர்வமா புரிஞ்சுக்கறதாத்தான் இருக்கு. அனுபவமா இல்லை.
பகவான்: நீ இதுவும் இல்லை... அதுவும் இல்லை...
நான் இருக்கேன்கறதுதான் உண்மை.
நான் நானா இருக்கேன். (I Am that I Am) -ன்னுதான் பைபிள்லே சொல்றது. இருக்கறதுதான் ஸ்வபாவம். அதை நான் இந்த உடம்புதான்கற நினைப்புதான் மறைக்கறது.
கேள்வி: வோட்டு எடுத்தா
என் கட்சிக்குதான் மெஜாரிட்டி
கிடைக்கும்.
பகவான்: நானும் உன் கட்சிக்கே ஓட்டு போடறேன்.
நானும் நான் மனுஷன்னுதான் சொல்றேன்.
ஆனா நான் இந்த உடம்பிலே இல்லை. இந்த உடம்புதான்
என் மேல இருக்கு. அதுதான் வித்தியாசம்.
கேள்வி: மனுஷ உபாதியை போக்கணும்லையா.
பகவான்: தூங்கும்போது எப்படி இருக்கே? அப்போ மனுஷ உபாதி என்ன ஆச்சு?
கேள்வி: அப்போ தூங்கும்போது
இருக்கற மாதிரி இப்போ
இருக்கணும்...
பகவான்: ஆமாம். அதுதான் ஜாக்ர சுஷுப்தி.
ஒரு பெண்மணி பகவான் முன்னாடி ஒரு பக்தி பாடல்
பாடினார்.
த்வமேவ மாதா (நீயே அம்மா) பிதா த்வமேவ (நீயே அப்பா)
த்வமேவ பந்து (நீயே சொந்தம்)
த்வமேவ சர்வம் (நீயே எல்லாம்)
பகவான்: ஆமா... ஆமா... எல்லாம் நீ... நான் மட்டும் நீ இல்லை. நானே நீ...ன்னு முடிச்சுட வேண்டியதுதானே.
பக்கம்:570 - 574.
அப்பனேஅருணாசலம். 🚩🕉🪷🙏🏻 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #சித்தர்கள் வாக்கு #மண்ணில் வாழ்ந்த மகான்கள்


