#அனுபவம் #வாழ்க்கை* #கதிரின் களம் # வணக்கம் நண்பர்களே 🙏. நமது உடலில் இதயத்தை விட முக்கியமான உறுப்பு சுவாச மண்டலமான நுரையீரல் ஆகும். இன்றைய காலகட்டத்தில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பிராணவாயுவை விட புகை சூழ்ந்த அசுத்த காற்றைத்தான் நான் அதிகம் சுவாசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெருநகரங்களில் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் இதனை அதிகம் உணர்ந்திருப்பார்கள். சரிவர கவனிக்கப்படாத எஞ்சின்களைக்கொண்ட வாகனங்கள் வெளிவிடும் புகை வாகனப்புகை பெரிய ஆலை நிறுவனங்களில் எரிக்கப்பட்டு வெளியேற்றும் புகை மேலும் பெருநகர குப்பைக்கிடங்குகளில் பற்றும் நெருப்பால் ஏற்படும் புகை மேலும் பொதுமக்கள் குப்பைகளை அழிப்பதற்காக ஆங்காங்கு பற்ற வைத்த நெருப்பினால் ஏற்படும் புகை இதற்கும் மேலாக நம்மை நாமே அழித்துக் கொள்வதற்காக சிலர் ஏற்படுத்திக்கொண்ட புகைப்பழக்கம் இப்படியாக நமது நுரையீரல் ஆனது நாளுக்கு நாள் பல்வேறு காற்று மாசுக் தாக்குதலுக்கு நாமே அறியாமல் ஆளாகிறது. ஏதோ ஒரு வகையில் இதனால் கடந்த மாதம் எனது நுரையீரலும் பாதிக்கப்பட்டது. இடைவிடாத தொடர் காய்ச்சல் மூச்சுத்திணறல் போன்ற காரணங்களால் அவதியுற்றேன். இறுதியாக ஒரு நுரையீரல் நிபுணர் என நுரையீரலை CT SCANE எடுத்து பார்த்த பின் எனது வலது நுரையீரல் டஸ்ட் அலர்ஜியினால் பாதிப்படைந்து நுரையீரல் முழுவதுமாக கெட்ட நீர் கோர்த்துவிட்டது உடனடியாக இதனை வெளியே எடுக்கவில்லை எனில் உயிருக்கே ஆபத்து என சொல்லிவிட்டார். உடனடியாக நான் திருச்சி SRM மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் மூன்று நாட்கள் முயன்று கிட்டதட்ட ஒன்றே முக்கால் லிட்டர் கெட்ட நீரினை நீண்ட ஊசியை என் நுரையீரலினுள் செலுத்தி வெளியே எடுத்தனர். அந்த நீரினை பரிசோதனை செய்து பார்த்து கேன்சர் இல்லை என தெரிந்த பின்னர் தற்போது நுரையீரலில் தங்கியிருக்கும் கொஞ்சம் நீரினை மாத்திரைகள் மூலமாக வெளியேற்ற மருத்துவம் அளித்து வருகிறார்கள். இதை ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்றால் காற்று மாசு கடுமையான சூழலில் நமது நுரையீரல் நிலை என்ன என என்பதனை அவ்வப்போது ஒரு நுரையீரல் நிபுணரிடம் காண்பித்து ஒரு எக்ஸ்ரே அல்லது சிடி ஸ்கேன் செய்து பார்த்துக்கொள்வது மிக அவசியமான ஒன்று. இல்லையேல் என்போல கடைசி நேரத்தில் சிரமத்தினை அனுபவிக்க வேண்டிவரும் நண்பர்களே. அதிகரித்து வரும் காற்று மாசினால் நுரையீரல் பாதித்திருக்கிறதா என அடிக்கடி கவனிப்பது மிக மிக அவசியமான ஒன்று. நுரையீரலை பேணி காப்போம்....


