🌿 இன்றைய தேவ வார்த்தை 🌿
யெகோவா மெபெல்தி (Jehovah Mephelti)
வேத வசனம்:
“கர்த்தர் என் கன்மலையும் என் கோட்டையும் என் இரட்சகரும்.”
— சங்கீதம் 18:2
செய்தி:
யெகோவா மெபெல்தி என்றால் “கர்த்தர் என் விடுவிப்பவர்” என்று அர்த்தம்.
சிக்கல்கள், பயங்கள், துன்பங்கள், எதிரிகள் சூழ்ந்த நேரங்களில்
கர்த்தர் நம்மை அதில் விட்டுவிடாமல்
அதில் இருந்து விடுவித்து வெளியே கொண்டு வருகிறவர்.
மனித உதவி இல்லாத இடங்களில்,
வழி இல்லை என்று தோன்றும் சூழ்நிலைகளில் கூட,
கர்த்தர் தம்முடைய வல்லமையால்
நம்மை பாதுகாத்து தப்புவிக்கிறார்.
இன்று நீங்கள் எந்தச் சூழ்நிலையிலிருந்தாலும்,
யெகோவா மெபெல்தி
உங்களை விடுவித்து வெற்றியோடு நடத்த வல்லவராய் இருக்கிறார்.
ஜெப சிந்தனை:
கர்த்தாவே,
நீர் என் யெகோவா மெபெல்தி.
என்னை எல்லா சிக்கல்களிலிருந்தும்
விடுவித்து,
உமது சமாதானத்தில்
என்னை நடத்தும்.
ஆமேன்.
— சகோ. சுதாகர் காட்வின்
ஹெப்ரான் ஜெப ஊழியங்கள்
#சகோ சுதாகர் காட்வின் #ஹெப்ரான் ஜெப ஊழியங்கள் #பைபிள் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்


