. *🌹ஓம் சாந்தி🌹*
இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
*16-01-2026 முரளி சிந்தனை*
*🪷 நீங்கள் செய்கின்ற கர்மங்கள் அனைத்திற்குமான பலன் நிச்சயமாகக் கிடைக்கிறது.*
*🪷 ஆனால் பலனை எதிர்பாராத சேவையை ஒரே ஒரு தந்தை மட்டுமே செய்கிறார்.*
*🥀கேள்வி:*
*இந்த வகுப்பு மிகவும் அற்புதமானது, எப்படி? இங்கே முக்கியமாக என்ன கடின உழைப்பு செய்ய வேண்டியுள்ளது?*
*🥀பதில்:🥀
*இந்த ஒரு வகுப்பில் மட்டும் தான் சின்னக் குழந்தைகளும் அமர்ந்துள்ளனர் மற்றும் முதியவர்களும் அமர்ந்துள்ளனர்.*
*🥀 இதில் அகல்யாக்கள், கூனிகள், சாதுக்களும் வந்து ஒரு நாள் இங்கே அமர்வார்கள்.*
*🥀 இந்த வகுப்பு அப்படி அற்புதமானது, இங்கே முக்கியமானது நினைவின் முயற்சி.*
*🥀 நினைவின் மூலம் தான் ஆத்மா மற்றும் சரீரத்திற்கு இயற்கைச் சிகிச்சை நடைபெறுகின்றது. ஆனால் நினைவு செய்வதற்காகவும் கூட ஞானம் வேண்டும்.*
*🧚பாடல்:*
*இரவு நேரப் பயணி களைத்துப் போகக் கூடாது............*
*ஓம் சாந்தி.*
*🦚இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். ஆன்மிகத் தந்தை குழந்தைகளுக்கு இதன் அர்த்தத்தையும் கூடப் புரிய வைக்கிறார்.*
*🦚கீதை அல்லது சாஸ்திரங்கள் முதலியவற்றை உருவாக்குகிறவர்கள் இதன் அர்த்தத்தை அறிந்து கொள்ளவில்லை என்பது தான் அதிசயம்.*
*🦚 ஒவ்வொரு விசயத்திலும் தவறானது தான் வெளிப்படுத்துகின்றனர்.*
*🦚ஆன்மிகத் தந்தை, ஞானக்கடலாக, பதித-பாவனராக இருப்பவர் அமர்ந்து இவற்றின் அர்த்தத்தைச் சொல்கிறார். இராஜயோகத்தையும் தந்தை தான் கற்பிக்கிறார்.*
*🦚நீங்கள் சொல்கிறீர்கள், நாங்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் போலவே மீண்டும் எல்லையற்ற தந்தையிடம் படிக்கின்றோம்.*
*🦚 இந்த விநாசமும் கூட மீண்டும் நிச்சயமாக நடைபெறப் போகிறது.*
*🦚 எவ்வளவு பெரிய-பெரிய அணுகுண்டுகளைத் தயாரித்துக் கொண்டே இருக்கின்றனர்! மிகவும் சக்திமிக்கதாக உருவாக்குகின்றனர்.*
*🦚 வெறுமனே வைத்திருப்பதற்காக ஒன்றும் தயாரிக்கவில்லை இல்லையா? இந்த விநாசம் கூட சுபகாரியத்திற்காகத் தான் அல்லவா?*
*🦚 குழந்தைகள் நீங்கள் பயப்படுவதற்கு அவசியம் எதுவும் கிடையாது.*
*🦚இந்த விநாசம் உங்களுக்காகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.*
*🦚 ருத்ர ஞான யக்ஞத்தின் மூலம் விநாச ஜுவாலை கொழுந்து விட்டு எரிந்தது என்ற பாடல் கூட உள்ளது.*
*🦚 அநேக விசயங்கள் கீதையில் உள்ளன, அவற்றின் அர்த்தம் மிக நன்றாக உள்ளது. ஆனால் யாரும் அதைப் புரிந்துக் கொள்வதில்லை.*
*🦚 அவர்கள் சாந்தியை வேண்டிக் கொண்டே இருக்கின்றனர். நீங்கள் சொல்கிறீர்கள், சீக்கிரம் விநாசமானால் நாம் போய் சுகமாக இருக்கலாம் என்று.*
*🦚தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள்.*
*🦚 இருப்பினும் ஆஸ்தியை அடைந்து விடுகின்றனர். துணையுடன் இருக்கின்றனர்.*
*🦚 கண்காட்சியில் அனைவரும் வருவார்கள். அஜாமில் போன்ற பாவாத்மாக்கள், கணிகைகள் முதலான அனைவரும் உயர்வடைய வேண்டும்.*
*🦚 கடை நிலை ஊழியர்கள் கூட நல்ல ஆடைகள் அணிந்து வருகின்றனர். காந்திஜி தீண்டத் தகாதவர்களுக்கு சுதந்திரம் அளித்தார்.*
*🦚 அவர்களுடன் சாப்பிடவும் செய்கிறார். தந்தையோ வேறு எந்த ஒரு தடையும் செய்வதில்லை.*
*🦚 குழந்தைகள் நீங்கள் இப்போது யக்ஞத்தின் சேவை செய்கிறீர்கள் என்றால் இந்த சேவையினால் மிகுந்த பலன் ஏற்படுகின்றது.*
*🦚 அநேகருக்கு நன்மை ஏற்படுகிறது. நாளுக்கு நாள் கண்காட்சி சேவையில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும்.*
*🦚 பாபா பேட்ஜ் கூட செய்ய வைத்துக் கொண்டிருக்கிறார். எங்கே சென்றாலும் நீங்கள் இது பற்றிப் புரிய வைக்க வேண்டும்.*
*🦚இவர் தந்தை, இவர் தாதா, இது தந்தையின் ஆஸ்தி. இப்போது தந்தை சொல்கிறார் - என்னை நினைவு செய்வீர்களானால் தூய்மையாகி விடுவீர்கள்.*
*🦚 கீதையிலும் உள்ளது-மாமேகம் யாத் கரோ (என்னை மட்டும் நினைவு செய்யுங்கள்). அதில் என் பெயரை மட்டும் எடுத்து விட்டுக் குழந்தையின் பெயரைக் கொடுத்துள்ளனர்.*
*🦚குழந்தைகளுக்கு சேவை செய்து கூடவே அழைத்துச் செல்கிறார். அந்த லௌகிக் தந்தை நினைப்பார், குழந்தை பெரியவனானதும் தனது தொழிலில் ஈடுபடுவான்.*
*🦚 பிறகு நமக்கு வயதாகி விட்டால் நமக்கு சேவை செய்வான் என்று. இந்தத் தந்தையோ சேவை கேட்பதில்லை.*
*🦚 இவர் பலனை எதிர்பார்க்காதவர். லௌகிக் தந்தை புரிந்து கொள்கிறார்.*
*🦚எது வரை நான் உயிருடன் இருக்கிறேனோ, அது வரை என்னைப் பராமரிப்பது குழந்தைகளின் கடமை என்று. இந்த ஆசை வைக்கின்றனர்.*
*🦚நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். புது உலகத்தின் இராஜதானி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை அறிவீர்கள்.*
*🦚ஆக, நீங்கள் இருப்பது சங்கமயுகத்தில். மற்ற அனைவரும் கலியுகத்தில் உள்ளனர். அவர்களோ, கல்பத்தின் ஆயுளே இலட்சக் கணக்கான ஆண்டுகள் எனச் சொல்லி விடுகின்றனர்.*
*🦚 பயங்கர இருளில் உள்ளனர் இல்லையா? பாடப்பட்டும் உள்ளது, கும்பகர்ணனின் உறக்கத்தில் உறங்கிப் போயுள்ளனர் என்பதாக.*
*🦚 வெற்றியோ பாண்டவர்களுக்கு எனப் பாடப் பட்டுள்ளது.*
*🦚நீங்கள் பிராமணர்கள். யக்ஞத்தை பிராமணர்கள் தான் படைக்கின்றனர்.*
*🦚 இதுவோ அனைத்திலும் பெரிய எல்லையற்ற ஈஸ்வரிய ருத்ர ஞான யக்ஞமாகும்.*
*🦚 அந்த எல்லைக்குட்பட்ட யக்ஞங்கள் அநேக விதமாக உள்ளன. இந்த ருத்ர யக்ஞம் ஒரு முறை மட்டுமே நடைபெறுகின்றது.* #👸எங்க வீட்டு இளவரசி🏠 #💘Love Quotes & Videos #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🥰பொங்கல் ஸ்டேட்டஸ்🎋 #🎵பொங்கல் ஸ்பெஷல் சாங்ஸ்🎶


