இன்றைய மருந்து தயாரிப்பு
*#முத்துபற்பம்*
வெள்ளெருக்கன் சமூலம் - இரண்டாவது புடம்
வெள்ளெருக்கன் சமூலம் செக்கில் ஆட்டி சாறு எடுத்து ஏற்கனவே புடமிட்ட முத்துவை மீண்டும் வெள்ளெருக்கன் சாறு விட்டு 72 மணி நேரம் கல்வத்தில் அரைத்து வில்லை தட்டி காய வைத்து புடமிடும் பணி
இது *#சுவாசகாசம்* (*#இரைப்பு*),
*#இருமல்*
*#குடல்புண்*
*#கொரோனா* பாதிப்பால் ஆக்சிஜன் குறைபாடுகளை களைவதற்கும்
ஈளை நோய்களைப் போக்குவதுடன் கடவுளின் குழந்தைகளாகக் கருதப்படும் சிறப்புக் குழந்தைகளுக்கு நரம்புகளை வலுப்படுத்தி அவர்களின் உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
வயதானோருக்குக் கண் விழிகளில் ஏற்படும் பிரச்சனைகளை வெகுவாகக் குறைத்து பார்வைத்திறனை அதிகரிக்க உதவுகிறது.
*#காசம்*
*#சிலேத்துமம்_96* ஆகியவையும் இதனால் குணமாகும்.
1. கள்ளிக் கொழுந்து சாறுடன் தேன் கலந்து பற்பத்தை உண்ண வாதத்தை பற்றி வரப்பட்ட *#பிடிப்பு*, கைகால் குத்து, *#உலைச்சல்*, *#நீர்க்கோவை* போல் வயி்ற்றில் கட்டிக் கொண்டு மிகவும் வலித்தல் ஆகியவைகள் தீரும்.
2. குளிர்ந்த தண்ணீருடன் ( அரை பலம் ) தேன் ( 2 வராகன் எடை ) கலந்து பற்பத்தை உண்ண *#சத்தி* *#விக்கல்* *#பெரும்பாடு* *#வல்லைக்கட்டி* *#மகோதரம்* *#பாரிசவாதத்தொடர்ச்சி* *#வெப்பவாயு* *#மேகக்குட்டம்* ஆகியவைகள் தீரும்.
3. பசுவின் தயிர் ( அரை பலம் (அ) 7 ½ கிராம் ) தேன் ( 2 வராகன் எடை ) கலந்து பற்பத்தை உண்ண நீர்க்கோர்வை *#பாரிசசன்னி* *#பெருவயிரு* *#இராசபரு* ஆகியவை தீரும்.
4. பசுவினெய் 1 வராகன் எடை தேன் 1 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி உண்ண *#உன்மத்தசோகை* *#பெரும்பாடு* *#பைத்தியவாதம்* *#பெருவயிரு* *#பித்தமூலம்* *#மயக்கபாண்டு* *#நீரிழிவு* *#சேத்துமசுரம்* *#பிரமியம்* ஆகியவைகள் தீரும்.
5. பசுவின் பால் அரை பலம் ( 17 1/2 கிராம் ), தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி கலந்துண்ண *#இரத்தநீரிழிவு*, *#உற்பாதபெருங்கழிச்சல்*, *#உற்பாதசக்தி*, *#வெப்பானிலம்* ஆகியவை தீரும்.
6. பனங்கள் அரை பலம் ( 17 1/2 கிராம் ), தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி கலந்துண்ண *#சொறி* *#சிரங்கு* *#தேமல்* *#பாண்டு* ஆகியவைகள் தீரும்.
7. வெந்நீர் அரை பலம், தேன் 3 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி உண்ண #அத்திபயோதர சிலந்தி, #எலும்புருக்கி பரு, #பாரிச வெப்ப பெரும்பாடு, #முகப்பரு, #வாய்ப்பூட்டு சன்னிப்பரு, #மேகவெட்கை, #பெருங் கழிச்சல் ஆகியவை தீரும்.
8. தேன் ஒரு வராகன் எடை இதில் பற்பத்தை மேற்கண்டபடி கலந்துண்ண *#மூத்திக்கிரிச்சரம்* *#நீரருகல்* *#மேல்மூச்சுமுட்டல்* *#விக்கல்* *#நீர்க்கட்டு* *#நீரொழுக்கு* *#நீரெரிவு* *#நீர்பீனிசம்* *#மதுமேகம்* *#யோனிப்புற்று* *#லிங்கப்புற்று* *#கிரந்திபுண்* *#வாதமூலம்* ஆகியவைகள் தீரும்.
9. திராட்சைப் பழரசம் அரை பலம் தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவுப்படி கலந்துண்ண *#வலியுடன்கூடியஅண்டவாதம்* *#வலியில்லாதஅண்டவாதம்* என்னும் இருவகை அண்ட வாதங்கள் *#கால்வீக்கம்* *#கால்இசிவு* *#பாரிசவாதம்* ஆகியவை தீரும்.
10.கைம்மாறு வெற்றிலைச் சாறு ஒன்னெகால் வராகன் எடை தேன் ஒன்னெகால் வராகன் எடை ஆகிய இரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவுப்படி கலந்துண்ண *#இருமல்* *#தாகம்* ஆகியவை தீரும்.
11.பன்னீர் அரைப்பலம் தேன் இரண்டு வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுபடி கலந்துண்ண பித்தசன்னிபாதம் நேத்திரபடலிகை நேத்திரவாயு பாரிசாந்தகாரம் மாலைக்கண் பித்தகுன்மம் ஆகியவைகள் தீரும்.
12. பசுவின் வெண்ணெய் அரைபலம் தேன் இரண்டு விராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுபடி கலந்துண்ண மாரிக்காலத்தில் கால்களெல்லாம் மரத்தைப்போல் திமிரடைந்து அசைக்க இயலாமல் இருப்பதும் எப்போது வலித்துக்கொண்டு உப்புசமும் பெருவயிரும் உடம்பெங்குந் தேள் கொட்டினது போன்ற கடுகடுப்பும் எரிச்சலும் விக்கலும் பிரமையும் உண்டாக்கத் தக்கதுமான இருவகை நோய்களும் தீரும்.
13. சீனிச்சர்க்கரை ஒரு வராகன் எடை ( 3 அரை கிராம் ) தேன் ஒரு வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவுப்படி கலந்துண்ண *#சொறி* *#சிரங்கு* *#கரப்பான்* *#சிலந்தி* *#செவ்வாப்பி* உடல் எல்லாம் மொத்தையாக கட்டிக் கொண்டு அசைக்க வொட்டாத வேதனையும் திமிரையுங் கொடுத்து அத்துடன் கோடைக் கொப்புளம் *#தேமல்* ஆகிய இவைகளை உண்டாக்கும். வாதத்தைப்பற்றிய நோய்களும் முதலில் உற்பாதக் காய்ச்சலும் குளிருங்கண்டு அத்துடன் வாந்தி விக்கல் இருமல் ஆகிய இவைகள் தோன்றி உடல் முழுவதும் சங்கம்பழத்தைப் போன்ற *#கொப்புளங்கள்* *#பருக்கள்* *#கட்டிகள்* ஆகியவை புறப்பட்டு வலியைக் கொடுக்கும். பித்தத்தைப் பற்றிய நோய்களும் வயிற்றெரிவு உடல்பருத்தல் வேதனை வீக்கம் ஆகிய இவைகளை உண்டாக்கி அவற்றுடன் *#ஒக்காளம்* *#விக்கல்* ஆகியவைகளை வரச்செய்து எருவாயைச் சேர்ந்த இரண்டு பக்கங்களிலும் புட்டங்களிலும் பருக்கள் கட்டிகள் ஆகியவைகளை வரப்பண்ணி அங்குள்ள சதைகளை வெடிக்க செய்கின்ற சேத்துமத்தை பற்றிய நோய்களும் தீரும்.
14. குளிர்ந்த நீர் அரை பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுபடி கலந்துண்ண பாதத்தில் *#இரணங்கண்டுதிமிருண்டாதல்* *#அக்கினிமந்தப்படுதல்* ஆகிய இக்குணங்களுடைய *#வாதக்களவுரணம்* தீரும்.
15. களாச் சமூலச்சாறு 2 வராகன் எடை தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுபடி கலந்துண்ண பல்லடியில் அதிக ரணங்கொண்டு மிக வேதனை தோன்றுதல் கக்கலும் அதிக பசியும் தாகமும் உண்டாதல் ஆகிய இக்குணங்களுடைய *#பித்தக்கசிவுரணம்* தீரும்.
16. மூங்கில் கிழங்குச்சாறு 2 வராகன் எடை தேன் 5 வராகன் எடை இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவுபடி கலந்துண்ண மூக்குத் தண்டில் அதிக இரணங்கண்டு வெகு உபத்திரவத்தை கொடுத்தல் ஒரு வேளை அதிக பசியையும் மறுவேளை அக்கினி மந்தத்தையும் உண்டாக்குதல் என்னுமிங் குணங்களையுடைய *#சேத்துமக்களவுரணம்* என்னும் நோய்கள் தீரும்.
17. விளாவிலைச்சாறு அரை பலம் தேன் 2 வராகன் எடை இவ்விரண்டையும் கலந்து மேற்கண்டபடி உண்ண *#கண்டத்தில்இரணங்காணல்* வாயில் சுவையின்மையாக உமிழ்நீரை உண்டாக்கும் ஆகிய குணங்களுடைய *#வாதமோகைணம்* தீரும்.
18. முந்திரிகைப் பழச்சாறு அரை பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்ட பற்பத்தை அளவுப்படி கலந்துண்ண *#நெற்றியில்இரணங்கண்டு* சதா எரிச்சலையும் பசி தாகத்தையும் உண்டாக்குதல் என்னும் குணத்தையுடைய *#பித்தமோகைரணம்* தீரும்.
19.நாணற் கற்கண்டு 2 வராகன் எடை ( 7 கிராம் ) தேன் 2 வராகன் எடை ( 7 கிராம் ) இவ்விரண்டையும் கலந்து மேற்கண்டபடி கலந்துண்ண முழங்காலில் இரணங்கண்டு வலியுடன் பசிதாகம் இல்லாதிருத்தல் என்னுங்குணத்தையுடைய *#சேத்துமமோகைரணம்* தீரும்.
20. வாழை சமூலச்சாறு 1 பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவோடு கலந்துண்ண இடுப்பைச் சுற்றிலும் வட்டமான ரணங்கண்டு உணர்ச்சியின்றி பசி இல்லாதிருத்தல் என்னும் குணத்தையுடைய *#வாதநகைரணம்* தீரும்.
21. சம்பு நாவல் பழச்சாறு அரை பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி பற்பத்தை அளவோடு கலந்துண்ண கை விரல்களின் அடியில் ரணங்கண்டு தோலுரிந்து எரிச்சலும் நமைச்சலும் உண்டாகி பசியும் மயக்கமும் காணுதல் என்னும் குணத்தையுடைய *#பித்தநகைரணம்* தீரும்.
22. பசுவின் தயிர் அரை பலம் தேன் அரை பலம் இவ்விரண்டையும் சேர்த்து மேற்கண்டபடி அளவோடு பற்பத்தைக் கலந்துண்ண அடிவயிற்றில் புண் கண்டு அதிக நீரேற்றங்கொண்டு பசி தாகமின்றி வெள்ளைப் பூண்டின் வாசனையுடைய ஏப்பத்தை உண்டாக்குதல் என்னுங்குணத்தையுடைய *#சேத்துமநகைரணம்* தீரும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்ய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP
அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
*தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* .
*இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* .
பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02.
மாநில துணைத் தலைவர்
*SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM)
மேலாண்மை இயக்குநர்-
*பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்*
3,வட்டாட்சியர் அலுவலக சாலை
தாராபுரம் (அஞ்சல்) - 638 656
திருப்பூர் மாவட்டம்
*SINCE 29 YEARS (1997 – 2026)*
http://www.siddharmedicine.in/
@ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்


