ShareChat
click to see wallet page
search
தென்னகத்து முருகப்பெருமானின் ஆலயங்களில் பல அதிசய வடிவங்களை கண்டிருப்போம் ஆனால் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் அமைந்திருக்கும் அருள்மிகு சதுர்முக முருகன் திருக்கோயில் மிகவும் தனித்துவமானது பொதுவாக முருகனை ஒரு முகம் அல்லது ஆறுமுகங்களுடன் தரிசித்திருப்போம் ஆனால் இங்கே முருகப்பெருமான் நான்கு முகங்களுடன் சதுர்முக முருகனாக மயில் வாகனத்தில் அமர்ந்து அருள் புரிகிறார் இங்குள்ள முருகனின் வலது கரத்தில் சங்கு முத்திரையும் இடது கையில் சக்கர முத்திரையும் இருப்பதைக் காணலாம் மேலும் மார்பில் கௌரிசங்கர் ருத்ராட்சம் சூடி ஞான உருவாய் காட்சியளிக்கிறார் செவ்வாய்க்கிழமை தோறும் நான்முக முருகனுக்கு பாலில் குங்குமம் கலந்து அபிஷேகம் செய்யப்படுகிறது இந்த தரிசனம் காண்பதற்கு மிகவும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் இத்தலத்திற்கு வந்து முருகனை வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கி நல்வாழ்வு அமையும் மேலும் திருமணத்தடை உள்ளவர்களும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் சதுரமுக முருகனை வழிபட்டால் எதிர்பார்த்த நியாயமான பலன் கிடைக்கும் விசுவாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் பெற இத்தலத்தின் நாயகி பால திரிபுரசுந்தரியின் அருளை நாடியதாக வரலாறு கூறுகிறது காலை 7:00 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் அருள்மிகு சதுரமுக முருகன் திருக்கோயில் சின்னாளப்பட்டி திண்டுக்கல் மாவட்டம் முருகன் வழிபடுவோம் அவன் அருளை பெறுவோம் #பக்தி
பக்தி - AANMIGAM REDDIYURAANMGA AANMIGAM வேறெங்கும் காண முடியாத சதுர்முக முருகன் AANMIGAM REDDIYURAANMGA AANMIGAM வேறெங்கும் காண முடியாத சதுர்முக முருகன் - ShareChat