பழைய பேப்பர்!
1957 தேர்தலில்தான் திமுக முதன்முறையாகப் போட்டியிட்டது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியினரின் முடிவை அறிந்து கொள்ள ஜனநாயக முறைப்படி அண்ணா வாக்கெடுப்பு நடத்தினார். திமுகவின் 2-ஆவது மாநில மாநாடு 1956 மே 17 முதல் நான்கு நாட்கள் திருச்சியில் நடந்தபோது தேர்தலில் பங்கேற்கலாமா… வேண்டாமா? என வாக்கெடுப்பு நடத்தினார்கள். அதில் ஆர்வமுடன் பெண்கள் பங்கேற்ற படம்தான் இது! அதுபற்றிய செய்தியை முரசொலியில் வெளியிட்ட போது ’தேர்தலு’க்கு தேர்தல் என தலைப்பிட்டிருந்தார்கள்.
தேர்தலில் போட்டியிட விரும்புவோர் சிவப்பு நிறப் பெட்டியிலும், வேண்டாம் என்று கருதுவோர் கறுப்பு நிறப் பெட்டியிலும் ஓட்டுப் போட்டார்கள். கொட்டும் மழையில் வாக்கெடுப்பு நடந்தது. மழையால் பலர் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாத நிலையிலும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் வாக்களித்தனர். தேர்தலில் திமுக போட்டியிட வேண்டும் என்று 56,942 பேரும், போட்டியிடக் கூடாது என்று 4,203 பேரும் வாக்களித்திருந்தனர். பெரும்பாலானோர் அளித்த தீர்ப்பின்படி 1957 தேர்தல் களத்தில் குதித்தது திமுக. மொத்தமுள்ள 205 இடங்களில் காங்கிரஸ் 151 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. திமுக 15 சட்டமன்றத் தொகுதிகளிலும் 2 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வென்றது. #📺அரசியல் 360🔴 #அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #🤭அரசியல் மீம்ஸ் #தமிழ்நாடு அரசியல்


