ShareChat
click to see wallet page
search
மார்கழி ஆண்டாள் பாவை நோன்பின் 27 ம் நாள் கூடாரவல்லி திருநாள் 🌞🙏🙏🌹🌹🪔🪔🔯⚛️ கோலம் 15 to 8 #கூடாரவல்லி இன்று #🙏🏻மார்கழி மாத சிறப்பு #மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பரம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #happy sunday திருப்பாவை திருப்பாவை பாடல் 27 கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப் பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். பொருள்: எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.🙏🙏
கூடாரவல்லி இன்று - ShareChat
00:38