ShareChat
click to see wallet page
search
“சண்முக நவக்கிரக பாமாலை” சண்முக நவக்கிரக பாமாலை என்பது, கிரக தோஷங்கள் நீங்கவும், வாழ்வில் உயர்வு பெறவும் முருகப்பெருமானின் ஆறுமுகனைப் போற்றிப் பாடும் ஒரு சக்திவாய்ந்த பக்திப் பாடலாகும். இதில் ஒவ்வொரு கிரகத்திற்கும் (சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு, கேது) தனித்தனியாக முருகனின் வெவ்வேறு திருநாமங்கள் மற்றும் பெருமைகளைப் போற்றி, அவற்றின் பாதிப்புகளை நீக்கி, அருளைப் பெறுவதற்குப் பாடப்படுகிறது. இது ஒரு மந்திரம் போன்றது; தினமும் காலையில் முருகனை நினைத்து மனமுருகப் பாடினால், வாழ்வில் ஏற்றம், புகழ், செல்வம் பெருகி, அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. முக்கிய அம்சங்கள்: நோக்கம்: நவக்கிரகங்களின் கெட்ட பலன்களை நீக்கி, நல்ல பலன்களைப் பெறுதல், வாழ்வில் உயர்வை அடைதல், புகழ் மற்றும் செல்வத்தைப் பெறுதல். பாடும் முறை: தினமும் காலையில் அல்லது விரும்பும் நேரங்களில் முருகனின் புகழைப் பாடுவது. பயன்கள்: முருகனைப் போற்றுவதன் மூலம், ஒன்பது கிரகங்களும் நம்மைப் பாதுகாக்கும், வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்துக்காட்டாக: சூரிய திசை: முருகப்பெருமானின் ஆறு கரங்களால் அருள்புரிந்து, சீரிய வாழ்வு தரும் செந்தில் வேலனைப் போற்றுவது. ஒன்பது கிரகங்கள்: முருகனைப் போற்றுவதன் மூலம், ஒன்பது கிரகங்களும் ஓடிவந்து காக்கும். சீரிய வாழ்வுக்கு கிரகங்களின் பாதிப்பு நீங்க ஆறுமுகன் புகழை அன்றாடம் போற்றிடவே ஏறுமுகம் கிடைக்கும்! சேரும் புகழ் ஏராளம்! ஒன்பான் கிரமுமே ஓடிவந்து காப்பாற்றும்! கண்ணான வேழமுகம் காப்பு செப்பும் சிலம்புரியின் சிங்காரம் தந்த கவி சுப்பிரமணியனுக்குத் தூதாகும்! அப்புறமாய் ஒன்பான் கரிமுகமே ஓங்காரம் கேட்டவுடன் இன்பமெல்லாம் கூட்டும் இனி! சூரியதிசை: ஆறிரு கரங்கள் கொண்டு அடியார்க்கு அருள் வழங்கி சீரிய வாழ்வு நல்கும் செந்திலே பழநி வேலா! சூரிய திசையிலே உன்னை துதிட்டேன் காக்க வாராய்! காரியம் யாவினுக்கும் கை கொடுத்து உதவுவாயே! சந்திர திசை: இந்திரன் முதலானோர்கள் இளமையாய் விளங்கும் உந்தன் மந்திரம் சொல்லி நல்ல மகத்துவம் பெற்றது உண்டு! சந்திர திசையில் உன்னை சந்தித்துப் போற்றுகின்றேன்! வந்திடும் செல்வமெல்லாம் வரத்தினால் வழங்குவாயே! செவ்வாய் திசை: ஒளவைக்கு நெல்லி தந்தாய்! அருணகிரி நாதருக்கும் திவ்வியக் காட்டி தந்தாய் திருவருள் கொடுப்பதற்கே செவ்வாயின் திசையில் உன்னை சேவித்துப் போற்றுகின்றேன்! வையகம் புகழும் நல்ல வாழ்க்கையை வழங்கு வாயே! புதன் திசை: கதம்பமும் முல்லை மல்லி கனிவுடன் சூடும் கந்தா சதமென ஆயுள் நல்கி சகலமும் அருளுவாயே! புதன் திசை நடக்கும் நேரம் போற்றி நான் வணங்குகின்றேன்! இதம் தரும் வாழ்வை நல்கி இன்பத்தை வழங்குவாயே! வியாழதிசை: ஆறுமுகம் கொண்ட செல்வா! அழகிய வள்ளி நேசா! பெருமைகள் வழங்கி நாளும் பிறர் போற்றும் வாழ்க்கை ஏற்க குருதிசை நடக்கும் நேரம் குமரனை வணங்குகின்றேன்! திருவருள் தருவதோடு செல்வாக்கும் அருளுவாயே! சுக்ரதிசை: தக்கதோர் வாகனங்கள் தனி இல்லம் மனைவி மக்கள் அக்கறை கொண்டு நாளும் அசுரகுரு வழங்கு மென்பார் சுக்கிரதிசையில் நாளும் சுப்பிரமணியன் உன்னை சிக்கெனப் பிடித்த தாலே சிறப்பெலாம் வழங்குவாயே! சனிதிசை: பிணியெலாம் அகலவேண்டிய பெரும் பொருள் கிடைக்க வேண்டி அணிதிகழ் வாழ்வு வேண்டி அல்லல்கள் அகல வேண்டி சனிசென்னும் திசையில் நாளும் சண்முகா உனைத் துதித்தேன்! கனிவுடைத் தெய்வம் நீயே காட்சி தந்தருளுவாயே! இராகுதிசை: நாகமாய் வடிவில் நின்று நடந்திடும் தோஷம் நீக்கி போகத்தை வழங்குதற்கே பூமியில் அருள் கொடுக்கும் இராகு எனும் திசையில் உன்னை இருகரம் கூப்பி வணங்குகிறேன்! பாகென இனிக்கும் கந்தா பதினாறு பேறும் தாராய்! கேதுதிசை: ஆதரவு வழங்குதற்கும் அண்டிய வழக்கு எல்லாம் தீதின்றி மாறுதற்கும் திறமைகள் தெரிவதற்கும் கேது திசையில் உன்னை கீர்த்தியாய் வணங்குகின்றேன் சாதனை செய்த வேலா சண்முகா அருளுவாயே! சண்முக நவக்கிரக பாமாலை பாம்பன் குமரகுருதாச சுவாமிகளால் எழுதப்பட்டது நன்றி வாழ்க நலமுடன் வளமுடன். #ஆன்மீகம்
ஆன்மீகம் - ShareChat