ShareChat
click to see wallet page
search
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொத்தையடி மருத்துவாழ் மலை அடிவாரத்தில் வைகுண்டபதியில் உள்ள அய்யா வைகுண்டர் ஆன்மீக மையத்துக்கு செல்ல ரூ. 5.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய காங்கீரிட் சாலை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் திறந்து வைத்தார் பொத்தையடி மருத்துவாழ் மலை அடிவாரத்தில் வைகுண்டபதியில் உள்ள அய்யா வைகுண்டர் ஆன்மீக மையத்துக்கு செல்வதற்கு வசதியாக புதிய காங்கீரிட் சாலை அமைத்து தர அய்யா வைகுண்டர் ஆன்மீக மைய நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் திரு. என்.தளவாய்சுந்தரத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். இக்கோரிக்கையினை ஏற்று இப்பணிகளை மேற்கொள்ள கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனடிப்படையில் இக்காங்கீரிட் சாலை அமைக்கப்பட்டு இதன் திறப்புவிழா மற்றும் அய்யா வைகுண்டர் ஆன்மீக மைய தியான மண்டபம் திறப்புவிழா நேற்று (03-01-2026) மாலை நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு புதிதாக போடப்பட்டுள்ள காங்கீரிட் சாலையினையும், அய்யா வைகுண்டர் ஆன்மீக மைய தியான மண்டபத்தையும் திறந்து வைத்து பேசும் போது தெரிவித்ததாவது, பொத்தையடி மருத்துவாழ் மலை அடிவாரத்தில் வைகுண்டபதியில் உள்ள அய்யா வைகுண்டர் ஆன்மீக மையத்துக்கு செல்வதற்கு புதிதாக காங்கீரிட் சாலை அமைத்து தர அய்யா வைகுண்டர் ஆன்மீக மைய நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை கரடு, முரடான பாதையில் அய்யா வைகுண்டர் ஆன்மீக மையத்துக்கு பக்தர்கள், பொதுமக்கள் சென்று வந்தார்கள். இன்று இக்குறை நீக்கப்பட்டு, பக்தர்கள், பொதுமக்கள் சமபாதையில் வசதியாக சென்று வருவதற்கு காங்கீரிட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்களுக்கு செய்கின்ற தொண்டு இறைவனுக்கு செய்கின்ற தொண்டுக்கு ஒப்பாகும். சக்தி வாய்ந்த இப்பதிக்கு நாள்தோறும் மக்கள் வந்து செல்கிறார்கள். நற்செயல்களை நாம் செய்யும் போது நன்மைகள் நம்மை தேடி வரும். மனதளவும் பிறருக்கு தீங்கு விளைவிக்க எண்ண கூடாது. நன்மைகள் செய்யும் போது நம் வாழ்வில் இறைவன் நன்மைகளை கொடுப்பார். பிறருக்கு உதவுகின்ற நற்குணங்களை நாம் வளர்த்து கொள்ள வேண்டும். இல்லாதவர்களுக்கு உதவிட வேண்டும். இரக்கமும், இறை வழிபாடும், பிறருக்கு உதவும் தன்மையும் நம்மை உயர்ந்த இடத்துக்கு அழைத்து செல்லும். அய்யா வைகுண்டர் பதியின் அருள் பெற்று வளம் பெறுவோம் என அவர் தெரிவித்தார். பின்னர் அவர் பக்தர்தளுக்கு அன்னதானத்தையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இவ்விழாவில் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் ராஜன், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் சிவசெல்வராஜன், கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு, கிழக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் சேவியர் மனோகரன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் தினேஷ், மாவட்ட அம்மா பேரவை தலைவர் பார்த்தசாரதி, ஒன்றிய பொருளாளர் தங்கவேல், அய்யா வைகுண்டர் ஆன்மீக மைய தலைவர் செல்வகுமார், செயலாளர் கிருஷ்ணமணி, நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். டைம்ஸ் ஆப் கஜா டிவி செய்தி விளம்பர தொடர்புக்கு ஜெயஸ்ரீ அட்வர்டைஸ்மென்ட் 96595 20537 ##TimesOFGajaTv ##தோவளைடிஜிட்டல்மீடியாபிரஸ்கிளப் #கஜா டிவி கன்னியாகுமாரி மாவட்ட முக்கிய செய்தி
#TimesOFGajaTv - ShareChat