ShareChat
click to see wallet page
search
♦️♦️தை பூசம் ஸ்பெஷல்: 4 🌹 வள்ளலார்- பகுதி 1 அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அன்பு உருவம் பெற்று அருள் நிலை அடைந்து இந்த மண் உலகினில் உயிர்கள் எல்லாம் வருந்தும் வருத்தத்தைப் போக்கவும் அகத்தே கருத்து புறத்தே வெளுத்திருக்கும் மக்கள் அனைவரையும் உலகத்தில் திருத்துவதற்கா க இறைவனால் வருவிக்கவுற்றவர் திருவருட் பிரகாச வள்ளலார். வாழையடிவாழையாக வந்த திருக்கூட்ட மரபி ல் வந்தவர் வள்ளலார். அன்றைய தென்னாற் க்காடு மாவட்டம் இன்றைய கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் மருதூர் என்ற ஊரில் 05-10- 1823 ஆம் வருடம் சுபானு வருடம் புரட்டாசி மாத ம் 21 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு சித்திரை நட்சத்திரத்தி ல் பிறந்து முத்திரைப் பதிக்க வந்தவர் வள்ளலார். இவர் இயற்பெயர் இராமலிங்கம். 🌹பெற்றோர்கள்: தந்தையார் : இராமையா பிள்ளை தாயார் : சின்னம்மையார் 🌹உடன் பிறந்தோர் : சபாபதி - அண்ணன் சுந்தரம்மாள் - அக்கா பரசுராமன் - அண்ணன் உண்ணாமலை - அக்கா ஐந்தாவது மகனாக வள்ளலார் பிறந்தார். 🌹வள்ளலார் வாழ்ந்த இடங்கள்: மருதூர் : 1823 - 1824 சென்னை : 1825 - 1858 கருங்குழி : 1858 - 1867 வடலூர் : 1867 - 1870 மேட்டுக்குப்பம் : 1870 - 1874 🌹வள்ளலார் இந்த உலகத்துக்கு வந்ததின் நோக்கம்: மனிதன் மாமனிதனாக வாழ்ந்து மரணமிலா ப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்பது தான் வள்ளலார் நோக்கம். அதற்காகத்தான் அகம் கருத்தவர்களையும் புறத்தில் வெளுக்கச் செய்யும் நோக்குடன் கருணை நிறைந்த திரு வருட்பா பாடல்களையும் உரைநடைப் பகுதிகளையும் திருமுகங்கள் (கடிதங்கள்) மூலமும் பேருபதேசம் மூலமாகவும் ஆன்ம நேயத்துடன் இந்த மனித குலத்தை வாழ்விக்க தேனினும் இனிய திருவருட்பாக்கள் அளித்து மனிதன் நீடுழி வாழ நமக்கு அருள் புரிந்தார்கள். 🌹வள்ளலார் கொள்கைகள்: 1. எத்துணையும் பேதமுறாது எல்லா உயிரும் தம் உயிர்போல் எண்ணும் உயர்ந்த நோக்கம் வேண்டும். 2. ஜீவகாருண்யம் தான் மோட்ச வீட்டின் திறவுகோல். 3. கடவுள் ஒருவரே: அவர் ஒளி வடிவானவர் (அருட்பெருஞ்ஜோதி). 4. ஜாதி சமய மதங்கள் எல்லாம் கடந்து ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஒருமை உணர்வாளராக இருக்க வழி செய்ய வேண்டும். 5. கண்மூடி வழக்கெல்லாம் மண்மூடி போக வேண்டும். 6. தானம் தவம் இரண்டும் இரு கண்கள் அதன் நுட்பங்களை விளக்கினார். 7. புலால் மருப்பு உயிர் ஓம்புதல் பசித்தவர்க ளுக்கு பசித்தவிர்த்தல் புரிய வேண்டும். 8. கடவுள் பெயரால் பலியிடக் கூடாது. 9. சிறு தெய்வ வழிபாடு கூடாது. 10. கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்க வேண்டாம். 11. மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்ய வேண்டாம். 12. இறந்தவர்களை புதைக்க வேண்டும். எரிக்கக் கூடாது. 13. கருமாதி திதி முதலிய சடங்குகள் செய்ய வேண்டாம். 14. எதிலும் பொது நோக்கம் வேண்டும். 🌹வள்ளலார் அருளிச் செய்தவைகள்: தேனினும் இனிய திருவருட்பாக்கள் 5818 பாடல்களை அருளியுள்ளார்கள். இவை ஆறு திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் முத்தாய்ப்பானது அருட்பெருஞ் ஜோதி அகவல். உரை நடை நூல்கள்: 1. மனுமுறை கண்ட வாசகம் 2. ஜீவ காருண்ய ஒழுக்கம் 3. வியாக்கியானங்கள் 4. மருத்துவக் குறிப்புகள் 5. உபதேசங்கள் 6. திருமுகங்கள் (கடிதங்கள்) 7. அழைப்பிதழ்கள் அறிவிப்புகள் கட்டளைகள் 8. விண்ணப்பங்கள் 🌹வடலூரில் வள்ளலார் நிறுவிய தெய்வ நிலையங்கள் 1. சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் 1865 2. சத்திய தருமச்சாலை 1867 3. சத்திய ஞான சபை 1872 4. மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் 🌹வள்ளலார் ஒரு பன்முக படைப்பாளி: 1. நூலாசிரியர் 2. உரை ஆசிரியர் 3. பதிப்பாசிரியர் 4. பத்திரிகை ஆசிரியர் 5. போதகாசிரியர் 6. ஞானாசிரியர் 7. சித்த மருத்துவர் 8. வியாக்கியான கர்த்தர் 9. அருள் கவிஞர் 10. அருள் ஞானி வள்ளலார் மணி ,மந்திரம், மருந்து இந்த மூன்றிலும் கைத்தேர்ந்தவர். இந்த தேகம் நீடிக்க வேண்டி பல்வேறு மருந்துகளை நமக்கு வள்ளலார் வழங்கியுள்ளார். 485 வகையான மூலிகைகள் மற்றும் அதன் குணங்களை அட்டவணைப் படுத்தியுள்ளார். ஞான மூலிகைகள் என ஐந்து மூலிகைகளை கூறியுள்ளார். அவை 1.கரிசலாங்கண்ணி 2. தூதுவளை 3.வல்லாரை 4.முசுமுசுக்கை 5. பொன்னாங்கண்ணி இவையல்லாமல் ஐந்து சஞ்சீவி மூலிகைகள் அதன் குணம் பற்றி கூறியுள்ளார். இந்ததேகம் நீடிப்பதற்கு நித்திய கருமவிதிகள் கூறியுள்ளார். உபதேசங்கள் பேருபதேசங்கள் செய்துள்ளார். 1. ஆகாரம் அரை 2. நித்திரை அரைக்கால் 3. விந்து வீசம் 4. பயம் பூஜ்ஜியம் 🌹நான்கு விதமான ஒழுக்கங்கள் கூறியுள்ளர் 1. இந்திரிய ஒழுக்கம் 2. கரண ஒழுக்கம் 3. ஜீவ ஒழுக்கம் 4. ஆன்ம ஒழுக்கம் 🌹மனிதன் துர்மரணம் அடைவதற்கான காரணத் தை வள்ளலார் கூறியுள்ளார். 1. அருந்துதல் (அதிகமான சாப்பாடு) 2. பொருந்துதல் (அதிகப்படியான உடல் உறவு) 🌹வள்ளலார் ஒரு வெள்ளாடை துறவி: துறவியான வள்ளலார் பசித்த அனைவருக் கும் சத்திய தருமச்சாலையை நிறுவி 152 ஆண்டுகளாக அவர் மூட்டிய அடுப்பு இன்று வரை எரிந்து வருகிறது. சத்திய ஞான சபை யில் வள்ளலார் ஏற்றிவைத்த ஜோதி தரிசனம் 148 ஆண்டுகளாக நடந்து வருகிறது. சித்தி வளாகம் மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் திருக்கரங்களால் ஏற்றப்பட்ட திருவிளக்கு 146 ஆண்டுகளாக சுடர்விட்டு பிரகாசித்து கொண்டு வருகிறது. " சாலை நடந்து வருகிறது, சங்கம் செயல் பட்டு வருகிறது, சபையில் ஜோதி தரிசனம் நடந்து வருகிறது, நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் எனக்குள் தனித்து.." என்றார் வள்ளலார்.. அவர் சொல்படியே இன்றளவும் எல்லாம் சிறப் பாக நடந்து வருகிறது. இந்த செயல்பாடு களே வள்ளலாரால் தான் நடைபெறுகிறது என்பதற்கு வேறு சான்று வேண்டாம். “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க” இந்த ஒற்றை வரி தான் வள்ளலார் வழிபாடு. உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறுகள் எல்லாம் விலக நீ அடைந்து விலக்குக் மகிழ்கசுத்த சன் மார்க்க சுக நிலைப் பெறுக உத்தமன் ஆகுக: ஓங்குக என்பதே வள்ளலார் திருவாக்கு. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க சற்குரு நாதா சற்குரு நாதா சன்மார்க்க சங்கம் தழைக்க அருள் தாதா வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே. 🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🙏தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🚩தொடரும்.... 🌹24.01.2026.. நேசமுடன் விஜயராகவன்... #🕉️ஓம் முருகா #🤔 ஆன்மீக சிந்தனைகள் #லதாநடராஜன் பக்தி படம் & ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் #✡️ராசிபலன் #LathaNataraj Edit'Z
🕉️ஓம் முருகா - விஜயராகவன் சந்தோஷமான நாட்கள் ன்னை நெருங்கிவிட்டன ன்எதிர்காலம் mnulllmnlhil வசந்தகாலம் ஆவதுஉறுதி இனிஉன் வாழ்க்கைப் பயணம் ஆனந்தமாக அமையும் வேலுண்டு வினையில்லை, கந்தனுண்டு கவலையில்லை. விஜயராகவன் சந்தோஷமான நாட்கள் ன்னை நெருங்கிவிட்டன ன்எதிர்காலம் mnulllmnlhil வசந்தகாலம் ஆவதுஉறுதி இனிஉன் வாழ்க்கைப் பயணம் ஆனந்தமாக அமையும் வேலுண்டு வினையில்லை, கந்தனுண்டு கவலையில்லை. - ShareChat