“தீதும் நன்றும் பிறர் தர வாரா…
அது பிறர் செய்ததாலல்ல…
நாம் செய்த வினையின் பிரதிபலிப்பு.
ஜோதிடத்தில் இதையே
கர்ம பலன் என்கிறோம்.
ஒருவரின் வாழ்க்கையில்
சுகமோ, சோதனையோ வந்தால்
அது யாராலும் கொடுக்கப்பட்ட தண்டனையல்ல…
அவரவர் ஜாதகத்தில்
செயல்படும் காலமும்
வினையின் நேரமும் தான்.
கிரகங்கள் குற்றவாளிகள் அல்ல…
அவை கணக்காளர்கள்.
ராகு–கேது, சனி, செவ்வாய்
எவரும் தீமை செய்ய வரவில்லை…
நாம் முன்பு செய்த வினையை
நமக்கு நினைவூட்ட மட்டுமே வருகிறார்கள்.
அதனால் தான்…
துன்பம் வந்தால் பழி தேட வேண்டாம்…
பகை வளர்க்க வேண்டாம்…
மாற்றம் தேட வேண்டும்.
வினை புரிந்தால்…
வழி தெரியும்.
வழி தெரிந்தால்…
வாழ்க்கை தெளியும்.
தீதும் நன்றும்
பிறர் தருவதல்ல…
வினை தீரும்போது
வாழ்க்கை மலரும்.” #வினை தீர்க்கும் விநாயகர் ஜோதிடம் #sana sri hi Tech key shop #🛍 Shop


