பழைய பேப்பர்!
பராசக்தி திரைப்பட கதைக்களம்!
பராசக்தி திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் ரவி மோகன், சிவகார்த்திகேயனை பிடித்து சித்ரவதை செய்வார். ரவி மோகனுடன் இருக்கும் இன்னொரு காவல்துறை அதிகாரி இந்தி எதிர்ப்பைச் சகித்துக் கொள்ள முடியாமல் சிவகார்த்திகேயனை தப்பிக்கவிடுவார். இது கதைக்காக செய்யப்பட்ட புனைவு என்றாலும் நிஜத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த போலீஸ்காரர்கள் சிலர் தயங்கியிருக்கிறார்கள்.
1965-ல் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த போது மதுராந்தகத்தில் போலீஸ்காரர் ஒருவரே கைதானார். 22 வயதான காவலர் புத்திரசிகாமணி மதுராந்தகம் சப்-ஜெயிலில் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தார். 1965 பிப்ரவரி 2-ஆம் தேதி இரவு 10 மணிக்கு "இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!" எனக் குரல் எழுப்பி, அருகில் இருந்த தபால் நிலையத்தை நோக்கி ஓடினார் புத்திரசிகாமணி. தபால் நிலையத்தில், இந்தியில் எழுதப்பட்ட பெயர்ப் பலகையை நோக்கி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் 3 முறை சுட்டார். மாடிக்கு ஏறிச் சென்று அங்கே கறுப்புக் கொடியை ஏற்றினார். "இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! சாஸ்திரி ஒழிக!" என்று குரல் எழுப்பினார். உடனே போலீஸார் விரைந்து சென்று புத்திரசிகாமணியை கைது செய்தனர். மதுரை மாவட்டம் சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த புத்திரசிகாமணிக்கு திருமணம் நடந்து 10 மாதங்கள்தான் ஆகியிருந்தது. மனைவி லெட்சுமி கர்ப்பிணியாக இருந்த போதே இந்தி எதிர்ப்புப் போரில் குதித்தார்.
2017-ல் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது மெரினாவில் காவலர் மாயழகும் திருச்சியில் போலீஸ்காரர் பெல்சனும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்கள் திரள் போராட்டங்களில் காக்கிகள் கூட களமிறங்கும்.
#அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #🤭அரசியல் மீம்ஸ் #தமிழ்நாடு அரசியல் #📺அரசியல் 360🔴


