ShareChat
click to see wallet page
search
🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹தேவாரம்🌹🙏* *☀️திருமுறை4️⃣☀️* *🌹🌻பொது🌻🌹* *🦚பாடல்:0766///1070🦚* `மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா` ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹கூழையே னாக மாட்டேன் கொடுவினைக் குழியில் வீழ்ந்து ஏழினின் னிசையி னாலு மிறைவனை யேத்த மாட்டேன் மாழையொண் கண்ணி னல்ல மடந்தைமார் தமக்கும் பொல்லேன் ஏழையே னாகி நாளு மென்செய்வான் றோன்றி னேனே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *கொடிய வினையின் பயனாகிய குழியில் விழுந்து எம்பெருமான் திருவடிக்கண் அன்பினால் குழையும் இயல்பு இல்லாதேனாய், ஏழிசையால் இறைவன் பெருமையைப் பாடமாட்டாதேனாய், இளைய ஒளி பொருந்திய கண்களை உடைய நல்ல பெண்களுக்கும் பொலிவு இல்லாதேனாய் அறிவற்றேனாய்க் காலத்தைக் கழித்தவனாயினேன். என்ன செயல் செய்வதற்காக இவ்வுலகில் பிறப்பெடுத்தேன் நான் ?* `எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!!` *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌺திருநாவுக்கரசர்🌺* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - ShareChat