மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்களை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு பேரவைத் தலைவர் திரு. ராஜசேகர், செயலாளர் திரு. நாராயணன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று அதிகக் காளைகளை அடக்கிச் சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத் துறையில் உரிய அரசுப் பணியிடங்களில் பணியமர்த்திட வழிவகை செய்யப்படும் என்றும், உலகப் புகழ் பெற்ற தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கான சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் 2 கோடி ரூபாய் செலவில் அலங்காநல்லூர் பகுதியில் அமைக்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவித்தமைக்காகவும், மேலும் உள்ளூர் காளைகளும், வீரர்களும் பங்குபெறுவதை உறுதி செய்திட ஏதுவாக, ஆன்-லைன் பதிவு முறையினை மாற்றி, அந்தந்த மாவட்ட அளவில் முடிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்படும் என்றும், மாடுபிடி வீரர்களுக்கு ஆயுள் காப்பீடு கட்டாயம் என்ற விதி தளர்த்தப்படும் என்றும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்களிடம் முத்திரைத் தாளில் பெறப்பட்டு வந்த உறுதிமொழிப் பத்திரம் என்ற நடைமுறை இரத்து செய்யப்படும் என்றும் இன்று புதிய அறிவிப்புகளை வெளியிட்டமைக்காகவும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️


