“இது ஒரு காலாவதியான கையேடு என்று சொல்பவர்களுக்கு, அதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு....
தலித்துகள் மீதான அட்டூழியங்களுக்கு தொடர்வதே இந்துக்கள் இந்த புத்தகத்தைப் பின்பற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாகும்....
அது காலாவதியானது என்றால், யார் அதை எரித்தால் உங்களுக்கு என்ன?? ஏன் இத்தனை பதற்றம்....
தலித்துகள் அதை எரிப்பதன் மூலம் என்ன சாதிக்கப்போகிறார்கள் என்று கேட்கலாம்...
காந்தி வெளிநாட்டு ஆடைகளை எரிப்பதன் மூலம் என்ன சாதித்தாரோ
கான்-மாலினியின் திருமணம் பற்றி வெளியிடப்பட்ட “ஞான-பிரகாஷ்” எரிப்பதன் மூலம் என்ன சாதிக்கப்பட்டதோ,
மிஸ் மாயோவின் “மதர் இந்தியா” புத்தகத்தை நியூயார்க்கில் எரித்தவர்கள் என்ன சாதித்தனரோ....
அரசியல் சீர்திருத்தங்களை வகுக்க உருவாக்கப்பட்ட சைமன் கமிஷனை புறக்கணிப்பதன் மூலம் என்ன சாதிக்கப்பட்டதோ...
அதுதான்....
இவை அனைத்தும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தவை...
மனுஸ்மிருதியை எரிப்பதனால் நாங்கள் சாதிக்கப்போவதும் அது தான்.....”
#டிசம்பர் 25 1927....மனுஸ்மிரிதி எரிப்பு நிகழ்வை தொடர்ந்து பாபாசாகேப் அம்பேத்கர்..... #டாக்ட்டர் அம்பேத் கர் #அம்பேத்கர் #மனுஸ்மிருதி எரிப்பு நாள் #😎வரலாற்றில் இன்று📰


