ஜோதிர் லிங்கம்
""""""""""""""""""""""""""""""""""
பத்தாவது ஜோதிர்லிங்கம் கேதார்நாத் ஜோதிர் லிங்கம் ஆகும் கேதார்நாத் ஜோதிர்லிங்கம் இமயமலையில் கடல் மட்டத்திலிருந்து 3583 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இந்த கோயில் பணி மூடிய சிகரங்களுக்கு மத்தியிலும் மந்தாகினி நதிக்கரையிலும் அமைந்துள்ளது குருசேத்திர போருக்குப் பிறகு தங்கள் பாவங்களில் இருந்து விடுபட சிவனின் ஆசிகளைப் பெற பாண்டவர்கள் இந்த தளத்திற்கு வருகை தந்ததாக கருதப்படுகிறது பாண்டவர்கள் சிவன் வழிபடும்போது சிவபெருமான் காளை வடிவத்தில் மறைந்து சிவனின் முதுகு பகுதி மட்டும் லிங்கமாக தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன இந்த கோயிலுக்கு கோடை காலத்தில் மட்டுமே செல்ல இயலும் வழக்கமான வட்ட வடிவ லிங்கத்தை போல் இன்றி முக்கோண வடிவத்தில் அதாவது கூம்பு வடிவத்தில் காணப்படும் இது சுயம்புலிங்கமாகும் கேதார்நாத் கோயில் பெரிய கற்களால் கட்டப்பட்டுள்ளது மேலும் இந்த விசித்திரமான லிங்கம் உள்ளது
கேதார்நாத்
உதுங்கநாத்
ருத்ரநாத்
மத்தியமமகேஸ்வரர்
கல்பேஸ்வரர்
ஆகிய ஐந்து கோயில்கள் பஞ்ச கேதார் என்று அழைக்கப்படுகிறது இவற்றில் கேதார்நாத் முக்கியத்துவமானது இந்த கோயில் ஏப்ரல் மே கம் தீபாவளி மட்டுமே தெரிந்திருக்கும் குளிர்காலத்தில் உற்சவர் உகிமத் என்ற இடத்திற்கு எடுத்து செல்லப்படுவார் #பக்தி


