~இரவுகள் எனக்கு பிடித்தமான
ஒன்றாகி போனது...
விவரம் அறிந்த முதல் காதலை
முதல் முதலாய் உன்னிடம்
சொன்னதும் இரவில் தான் !
முதல் முறை உன் மௌனம் கேட்டதும்
முதல் முறை உன் கண்ணீர் என்னை
சிதைத்தும் அந்த இரவில் தான் !
நீ என் காதலன் என்ற உணர்வை மீறி
நீ என்னவன் என்ற விதையை
விதைத்ததும் அந்த இரவில் தான் !
இரவுகளுக்கு துணையாய்
நாம் வாழ்ந்ததும்...
smileyகளுக்கு சலித்து போகும்
வரை முத்தங்கள் கொடுத்ததும்
இதழ் இணையாமல் இதழ்கள் வலிக்கும்
வரை காதலை உணர்ந்ததும்
அந்த இரவில் தான் !
நீயும் நானும் என்ற அகராதி
நாம் என்று மாறியதும்
அந்த இரவில் தான் !
என் தூக்கங்களை திருடி விட்டு
என் கனவுகளை அனாதை ஆக்கி
விட்டு நீ என்னை பிரிந்ததும்
அந்த இரவில் தான் !
உன் பிரிவின் வலியில்
ஒரு முறை எமனை சந்தித்ததும்
அந்த இரவில் தான் !
இன்றும் உன் வருகைக்காக
காத்திருப்பதும்...
இந்த இரவில் தான் !
#💞Feel My Love💖 #🎵Lyrical Status
#💘Love feel Forever 💌 #😢Sad Feelings💔 #📷நினைவுகள்
00:33

